Home » அண்ணாமலை: ஆதி முதல் இன்று வரை
தமிழ்நாடு

அண்ணாமலை: ஆதி முதல் இன்று வரை

2022 செப்டம்பரில் நடந்த தி.மு.க. பொதுக்குழுவில், அதன் தலைவர் ஸ்டாலின், `தி.மு.க.வின் முதல் எதிரி பா.ஜ.க.தான், அதை எதிர்க்கக் கட்சியினர் முழு மூச்சுடன் தயாராக வேண்டும்` என்று சொன்னார். கிட்டத்தட்ட அந்தத் தருணம்தான், தமிழகத்தில் கடந்த 45 வருடங்களாக தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் மட்டுமே இருந்த போட்டியை அதிகாரபூர்வமாக தி.மு.க. vs பா.ஜ.க. என மாற்றிய தருணமாக இருக்கும். அதற்கான மிக முக்கியக் காரணி அண்ணாமலை.

அவர் பா.ஜ.க.வின் தமிழகத் தலைவராக நியமிக்கப்பட்ட உடனேயே, தமிழக அரசியலின் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. பா.ஜ.க. தலைமையில்தான் அடுத்த தேர்தல் நடக்கும் என்றார். அப்போது அவர்கள் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. நேராக டெல்லிக்குச் சென்றே அமித்ஷாவிடம் குறை சொல்லிவிட்டு வந்தது. பொதுவாக தேசியக் கட்சிகளின் தலைவர்கள், மாநிலக் கட்சியின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் என்ற பொதுவிதியின் அடிப்படையில் அண்ணாமலை அடக்கப்படுவார் அல்லது மாற்றப்படுவார், என்று நம்பினார்கள். ஆனால் அதற்குப் பிறகே அவரின் விஸ்வரூபம் தொடங்கியது. அவர்தான் தலைவர் என்பதை பா.ஜ.க. அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • இது நகைச்சுவை கட்டுரை வகையில் வருமாங்க சார் ?

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!