Home » மூன்றாம் கலைஞரும் இரண்டாம் எம்ஜிஆரும்
தமிழ்நாடு

மூன்றாம் கலைஞரும் இரண்டாம் எம்ஜிஆரும்

அரசியலுக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டி முதல்வராவாகும்  கனவென்பது, தமிழகத்தில் முன்னணியிலிருக்கும் திரைப்பட நடிகர்கள் அனைவருக்குமே இருக்கிறது. திரளும் ரசிகர் பட்டாளமும், திரைத்துறையின் பால் தாக்கம் கொண்ட மாணவர்களும், இளைஞர்களும் செல்லுமிடமெல்லாம் தொடர்வதும், திரைவழி பெருகிய செல்வாக்கும்,  அந்த கூட்டம் வாக்குகளாக மாறலாமே என்ற கணக்குகளுமே காரணம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழகத்தை ஒரு நடிகர் ஆள்வது என்ற விஷயம் எல்லா உச்ச நடிகர்களுக்குமே இன்று கிட்டத்தட்டப் பகல் கனவாகத்தான் போயிருக்கிறது. சிலர் இறங்கித் தோற்கின்றனர், சிலர் நிலைமை உணர்ந்து பின்வாங்கினர். வாக்கும் கூட்டமும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இருவேறு காரணிகளாகி விட்டகாலம் இது என்பதைப் பெரும்பாலானோர் இன்று உணர்ந்திருக்கிறார்கள்.

ஆனால் இன்றும், ஒரு நடிகர் நாடாள முடியுமா என்ற கேள்வியை உரக்க எழுப்பினால், உதயநிதிக்கு மட்டும்தான் அந்த வாய்ப்பானது பிரகாசமாக இருக்கிறது என்பதே இன்றைய அரசியல் நிலவரம். தி.மு.க.வின் வாரிசாக அவரை முன்னிறுத்தி வருடங்கள் ஆகிவிட்டன. எம்.எல்.ஏ. ஆவாரா? மந்திரி ஆவாரா? என்ற கேள்விகளுக்கெல்லாம் சடுதியில் விடை கிடைத்தன. எப்போது துணை முதல்வர் என்பதே இப்போதைய கேள்வி. அதிகாரபூர்வத் தலைவராக ஆவது எப்போது என்பது சற்றே நீண்ட கேள்வியாயினும், பதில் தெரியாத புதிரொன்றுமல்ல.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்