கடற்படுக்கை என்றவுடன் மீன்கள் பாடித் திரியும் ‘ மெத்’ என்ற மணற்தரை ஒன்றைக் கற்பனை பண்ணி வைத்திருப்போம். ஆனால் நிஜத்தில் ஆழியின் அடித்தளம் மிக மிகப் பயங்கரமானது. விசாலமானது. பரபரப்பான வாஷிங்டன் நகரைவிடப் பன்மடங்கு சுறுசுறுப்பானது. மலைகள், அகழிகள், எரிமலைகள், சுடுநீர்ச் சுனைகள், இரசாயனத்...
Author - ரும்மான்
கொழும்புச் சீமைக்கும் சிங்காரச் சென்னைக்கும் இடையில் தூரம் என்னவோ அறூநூற்றைம்பது கிலோ மீற்றர்கள்தான். ஆனால் இடை நடுவில் ஆர்ப்பரிக்கும் கடலைத் தாண்டிப் போக வேண்டியிருப்பதால் பயணம் எப்போதுமே காஸ்ட்லியானது. இத்தனை காலமும் இந்த இரு புள்ளிகளுக்குமிடையில் கள்ளத்தோணி தவிர்த்து, ஆகாய மார்க்கம் ஒன்றில்...
ஃபோனைக் கட் பண்ணும்போது மறுமுனையில் சஹானா சத்தமாகச் சொல்வது காதில் விழுகிறது. டின்னருக்குக் கொய்யாப்பழம்தான் என்று முடிவானதன் பின்னர், சின்னதாக ஒரு பழம் சாப்பிட்டால் போதுமா. காலையாகும் வரை பசி என்ற சொல்லே தலை தூக்காத வண்ணம் வயிறு நிறையக் கொய்யாவை நிரப்ப வேண்டும். சஹானாவின் இந்த வகையான கொள்கைகள்...
இரண்டு தசாப்தங்களின் பின் தனது தாய் நாட்டுக்குத் திரும்புகிறது ‘முது’ என்கிற முது ராஜா. பயணச் செலவு ஏழு இலட்சம் யு.எஸ். டாலர்ஸ்! பளபளக்கும் நீண்ட தந்தங்களையுடைய முழு வளர்ச்சியடைந்த யானையொன்றை, நாடு விட்டு நாடு தூக்குவதென்பது எளிதான காரியமல்ல. அதுவும் நோய்வாய்ப்பட்டு, கொஞ்சம்...
96 போன்ற திரைப்படங்களைப் பார்த்து ரசிக்கிறோம். உண்மையில், பள்ளி மாணவர்களுக்கு வருகிற காதல், அவர்களது எதிர்காலத்தைக் கபளீகரம் செய்துவிடும் அபாயம் அதிகம். நமது இலங்கைச் செய்தியாளர் ரும்மான் ஒரு பள்ளி ஆசிரியை. அதுவல்ல சிறப்பு. மாணவர்களின் காதலை வலிக்காமல் சஸ்பெண்ட் செய்து வைக்கும் கலையில் அவர் வல்லவர்...
ஒரு குடியானவனிடம் காளை மாடொன்று இருந்தது. சொந்தப் பிள்ளை போல அதனை வளர்த்து வந்தான். குடும்ப உறுப்பினராகவே மாறிவிட்ட அந்தக் காளையோடு, உள்ளார்ந்த பிணைப்பொன்றை ஏற்படுத்தி இருந்தான். தன் எஜமானின் அன்பில் உருகி நின்ற காளை, தளதளவென்று வளர்ந்து, வேலைகளையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தது. ஒருநாள்...
அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் புறப்பட்டால் மட்டுமே கொழும்புக்குப் போகும் வேனில் இடம் கிடைக்கும். பாப்பாவுடன் தாயோ தந்தையோ, யாராவது ஒருவர் போகலாம். வவுனியாவிலிருந்து பயணம் தொடங்கி பல மணி நேரங்கள் கடந்து கொழும்பு புற்றுநோய் வைத்தியசாலையை அடைவதற்குள் குழந்தை சோர்ந்தே போய்விடும். ஒரு பயணத்திற்கான...
‘டயானா கட்’ வெட்டிய இளம்பெண்ணொருத்தி ராயல்நீல நிறத் துணியில் நுணுக்கமான பல் வர்ண நூல் வேலைப்பாடுடன் கூடிய உயர்ரக சூட் ஒன்றை அணிந்து பாதையில் நடந்து செல்கிறாள். பாதசாரிகள் அத்தனை பேரும் திரும்பித் திரும்பிப் பார்க்கிறார்கள். அந்த ஆடையின் வசீகரம் ஊருக்கு மிகப் புதிதாக இருந்தது...
“ஷாங்காய் விமான நிலையம் நோக்கிப் பயணமாகும் UL866 விமானத்தில் டிக்கட் பதிவு செய்திருக்கும் பயணி Mr.Macaca-வுக்கான இறுதி அழைப்பு இது. தயவுசெய்து பன்னிரண்டாம் இலக்க நுழைவாயிலை நோக்கி விரையவும்” மனைவி, பிள்ளைகளின் கைகளை இறுகப் பற்றியிருந்த மிஸ்டர் மகாகா எனும் குரங்கு மாமா, பெருமிதத்தோடு...
அதிகாலைக்குச் சற்று முன்னதான நேரம். இரவு முழுவதும் அந்தப் புனித ஸ்தலத்தில் தொழுது பிரார்த்தனை புரிந்திருந்த மக்கள், நோன்பு பிடிப்பதற்காக ஸஹர் உணவை உட்கொள்ளத் தயாராகக் காத்திருக்கின்றனர். ‘பள்ளிவாசலில் தரித்திருத்தல்’ என்பது ரமளான் மாதத்தில் இஸ்லாமியர்களின் ஒரு வழிபாட்டு வடிவமாகும்...