Home » சஹானாவெனும் மான்குட்டி
காதல்

சஹானாவெனும் மான்குட்டி

ஃபோனைக் கட் பண்ணும்போது மறுமுனையில் சஹானா சத்தமாகச் சொல்வது காதில் விழுகிறது.

டின்னருக்குக் கொய்யாப்பழம்தான் என்று முடிவானதன் பின்னர், சின்னதாக ஒரு பழம் சாப்பிட்டால் போதுமா. காலையாகும் வரை பசி என்ற சொல்லே தலை தூக்காத வண்ணம் வயிறு நிறையக் கொய்யாவை நிரப்ப வேண்டும். சஹானாவின் இந்த வகையான கொள்கைகள் அன்வருக்குப் புரியவே புரியாது. என்றாலும் அமைதியாக அவள் இஷ்டம் போலப் பண்ணிக் கொடுக்கிறான்.

வாட்சாப் டீபீயில் பேரொளியாகப் புன்னகைக்கும் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தாவாறே கார் பார்க்கிங் பக்கம் போகிறான்.

கட்டாருக்கு வந்த இந்த இரண்டு வருடங்களில் என்னமாக மாறி விட்டாள். ‘பின்க் பாஸ்தா’வில் தொடங்கி உலகின் ஏழு கண்டங்களிலிருந்தும் எழுபது வகையான க்யூசீன் வகைகள் சமைத்துக் கொடுத்தவள், இப்போது இரவுணவுக்கு வேக வைக்காத காய்கறி என்கிறாள், வேர்க்கடலை என்கிறாள். வீட்டுக்கு வருவதே தர்ம சங்கடமாகிப் போய்விட்டது அவனுக்கு. வீடு என்றால் அறைதான். ஜன்னலைத் திறந்தால் சூடான வளியுடன் பக்கத்து அறையின் மூச்சுக் காற்றும் முட்டி மோதியபடி உள்ளே வரும். மெல்லிய திரைச்சீலைகளுக்கு அப்பால் விரிந்திருந்த அறவே சம்பந்தமில்லாத உலகத்தைப் பற்றி அவர்கள் அலட்டிக் கொள்ளவே இல்லை. காதலித்துத் திருமணம் செய்த பெண்ணோடு வந்து குடியேறிய கனவு இல்லம் அது. வரும்போது ஐந்து மாதக் கர்ப்பிணி அவள்.

ஆஃபீஸிருந்து கிளம்பி வந்து, லுலு மாலில் காரைப் பார்க் செய்து விட்டு கொய்யாப் பழத்துக்காக மாடிக்குப் போகிறோம் என்று நினைக்கும்போதே ஒரு மாதிரியாக இருந்தது. உலகின் எந்த மூலையில் காய்க்கும் காய்கறி பழங்களையும், பறித்த கையோடு கொண்டு வந்து வைத்திருப்பார்கள் இந்த மாலில். பாப்பாவுக்கு யோகட் வாங்கவும் வேண்டும். நடையைத் துரிதப்படுத்துகிறான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!