Home » வெசாக்: நாளெல்லாம் புனிதம், நாடெல்லாம் கொண்டாட்டம்!
விழா

வெசாக்: நாளெல்லாம் புனிதம், நாடெல்லாம் கொண்டாட்டம்!

வெசாக்

ஒரு குடியானவனிடம் காளை மாடொன்று இருந்தது. சொந்தப் பிள்ளை போல அதனை வளர்த்து வந்தான். குடும்ப உறுப்பினராகவே மாறிவிட்ட அந்தக் காளையோடு, உள்ளார்ந்த பிணைப்பொன்றை ஏற்படுத்தி இருந்தான். தன் எஜமானின் அன்பில் உருகி நின்ற காளை, தளதளவென்று வளர்ந்து, வேலைகளையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தது. ஒருநாள் தன் எஜமானிடம் வந்து, “அப்பனே, உங்களுக்கு ஏதாவது நன்றிக் கடன் செய்ய வேண்டும் என்று என் மனம் விரும்புகிறது. நான் சொல்லும்படி செய்வீர்களா?” என்று கேட்டது.

“நீ செய்யும் உதவிகள் போதாதா மகனே?”

“இல்லை. உங்களது அன்புக்குப் பகரமாக, பெரிதாக ஏதும் பண்ண வேண்டும்” காளை விடாப்பிடியாக நின்றது.

அவனும் காளை மகனின் கட்டளைப்படி, ஆயிரம் பொற்காசுகள் பந்தயமொன்றைக் கட்டினான். “எனது காளையின் பின்னால், நூறு வண்டிகளைக் கட்டுவேன். ஒரே நொடியில் அனைத்தையும் இழுத்துக் காட்டும்” என்று அறிவித்தான்.

பணக்கார வணிகனொருவன் பந்தயத்துக்கு ஒப்புக்கொண்டான்.

வரிசையாக நூறு வண்டிகள், முன்னால் நமது காளை.

“ஏனடா பார்த்திருக்கிறாய் முட்டாள் காளையே… உடனடியாக இழுப்பதாகச் சொன்னாயே? இழுடா மக்குப் பயலே!”

குடியானவனின் உத்தரவு எதுவும் பயனளிக்கவில்லை. பந்தயத்தில் தோற்று தன் உடமைகள் அனைத்தையும் விற்று ஆயிரம் பொற்காசுகளை இழந்து, வயலில் படுத்திருந்தான், குடியானவன்.

காளை துக்கத்தோடு அருகில் வந்தது..

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!