நூற்றுக்கணக்கான இளைஞர்கள். இரண்டு பழங்குடியினப் பெண்கள். அந்த இரு பெண்களையும் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து வருகின்றனர். அதன் பிறகு கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். காணவே சகிக்காத இந்த சம்பவம் நடந்தது மே மாதத் தொடக்கத்தில். இந்தக் காணொளிதான் இப்போது சமூக ஊடகங்களில் பரவி...
Author - அ. பாண்டியராஜன்
பொது சிவில் சட்டம் (Common Civil Code). பிரதமர் மோடி கடந்த ஜூன் 27-ஆம் தேதி போபாலில் இதைப் பற்றிப் பேசிய பிறகு பலரும் எதிர்த்தோ ஆதரித்தோ பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பல வருடங்களாகப் பேசப்பட்டு வரும் இந்த பொது சிவில் சட்ட விவகாரம் பாரதிய ஜனதாவின் 2019-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. அடுத்த...
பல்லாவரம் சந்தை. சென்னையின் மிகப் பழமையான சந்தை. அத்தனைப் பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் சூப்பர் மார்க்கெட், ஹைப்பர் மார்க்கெட் எனப்படும் பல்பொருள் அங்காடிகள். அவற்றிற்கெல்லாம் முன்னோடி இது. நூறாண்டுகளுக்கும் மேல் வயதானது எனச் சொல்லப்படும் இந்த சந்தை...
ஒரு பெண். பெண்ணா, சிறுமியா என்று சரியாகத் தெரியவில்லை. அவளை நடுச் சாலையில ஒரு கும்பல் சூழ்ந்துகொள்கிறது. கும்பலில் ஒன்றிரண்டு பெண்களும் இருக்கிறார்கள். சிலர் ராணுவச் சீருடை அணிந்திருக்கிறார்கள். மாட்டிக்கொண்ட பெண்ணிடம் மாற்றி மாற்றி அவர்கள் ஏதோ கேட்கிறார்கள். மிரட்டுகிறார்கள். எட்டி உதைக்கிறார்கள்...
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பிகாரில் கூடி ஆலோசனை செய்துள்ளார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக அணி திரட்டும் நிகழ்வு பிகாருக்குப் புதிதல்ல. கட்சி மாறி இருக்கிறதே தவிர காட்சி மாறவில்லை. ஆளுங்கட்சியை எதிர்த்துப் பேசினால் உடனே சிறைவாசம். அரசின் அத்தனை அமைப்புகளும் பாய்ந்து...
கடந்த வாரம் முழுதும் ஊடகங்களை ஆக்கிரமித்தவர், மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. துறையின் பெயர்தான் மதுவிலக்கே தவிர, டாஸ்மாக் நிர்வாகம்தான் அவருக்கு முக்கியப் பணி. டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுவது ஊரறிந்த உண்மை. அதைச் சுட்டி, அவரைப்...
கேரள மாநிலம் வைக்கத்திலிருக்கும் மஹாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் கூடாதென்ற நடைமுறை பலகாலமாக இருந்தது. இதை எதிர்த்து 1924-ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி தொடங்கியது ஒரு போராட்டம். அதற்கு “வைக்கம் போராட்டம்” என்று பெயர். அஹிம்சை வழியில் நடந்த இந்தப் போராட்டம்...
எது தண்டவாளம், எது எந்த ரயில்களின் பெட்டி எனத் தெரியாதவாறு அந்த இடமே உருக்குலைந்து போயிருந்தது. ரயில் பெட்டிகள் ஒன்றின் மீதொன்றாக ஏறி நின்றிருந்தன. சில பெட்டிகள் பக்கவாட்டில் கவிழ்ந்து கிடந்தன. சில பெட்டிகள் தூக்கித் தனியே வீசப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளுக்குள் இருந்த பயணிகள் பலரும் இடிபாடுகளில்...
2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தற்கொலைக் குறிப்பும் அவரது அலைபேசியும் உடன் கைப்பற்றப்பட்டன. தமிழ்நாட்டை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கின் ஆரம்பம் இதுதான். 2015, ஜூன் 23-ஆம் தேதி கோகுல்ராஜும்...
ஒரு மாநிலத் தேர்தலின் வெற்றியை ஒரு கட்சி நாடு முழுவதும் கொண்டாடிய காட்சிகளை கடந்த 13-ஆம் தேதி நாம் அனைவரும் பார்த்தோம். கர்நாடகக் காங்கிரஸ் அலுவலகம் விழாக்கோலமாக இருந்தது. கர்நாடக மாநிலத் தேர்தலின் வெற்றி காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்குப் புத்துணர்வளித்திருக்கிறது. அடுத்தடுத்த மாநிலத் தேர்தல்களை...