Home » பொது சிவில் சட்டம்: இப்போது என்ன அவசியம்?
இந்தியா

பொது சிவில் சட்டம்: இப்போது என்ன அவசியம்?

பொது சிவில் சட்டம் (Common Civil Code). பிரதமர் மோடி கடந்த ஜூன் 27-ஆம் தேதி போபாலில் இதைப் பற்றிப் பேசிய பிறகு பலரும் எதிர்த்தோ ஆதரித்தோ பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பல வருடங்களாகப் பேசப்பட்டு வரும் இந்த பொது சிவில் சட்ட விவகாரம் பாரதிய ஜனதாவின் 2019-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை எதிர் நோக்கியிருக்கும் இந்தச் சமயத்தில் இதை நிறைவேற்றுவதை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர். இருவேறு சட்டங்களை வைத்துக் கொண்டு நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்பது மோடி முன் வைத்திருக்கும் கருத்து.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் சமயத்தில் இப்போதைய இந்தியா பல பிரிவுகளாக இருந்தது. ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் தனித்தனிச் சட்டம் என்பது நடைமுறையாக இருந்தது. இந்தியாவை ஒருங்கிணைக்கும்போது இந்தச் சட்டங்களையும் பொதுவானதாக மாற்ற வேண்டிய தேவை இருந்தது. கிரிமினல் சட்டங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானதாக ஆக்கப்பட்டுவிட்டது. தனி நபர், குடும்பம் சார்ந்த சட்டங்கள் மட்டும் மதம் சார்ந்து இருக்கின்றன. திருமணம், விவாகரத்து, வாரிசு, சொத்துரிமை உள்ளிட்ட விவகாரங்கள் அந்தந்த மத, இனக்குழுக்களின் பழக்க வழக்கங்கள் அடிப்படையில் செயல்படுகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • பொது சிவில் சட்டம் என்பது ஒரு பொது சுடுகாடு என்பதுதான் மறைமுக செய்தியா பாண்டியன் ?

  • அருமையான அலசல். நெடுங்கால சட்ட முரண்களையும், பன்முகத் தன்மை கொண்ட இந்திய ஒன்றிய களம் குறித்தும், ஒன்றுபட்ட இந்தியாவைத் திரட்டும் வேளையில் கூறியதையும், இடப்பட்ட ஒப்பந்தங்களையும் மீறும் செயலே பொது உரிமையியல் சட்டம் என்பது.

    கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!