Home » கர்நாடகத் தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடம் என்ன?
இந்தியா

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடம் என்ன?

ஒரு மாநிலத் தேர்தலின் வெற்றியை ஒரு கட்சி நாடு முழுவதும் கொண்டாடிய காட்சிகளை கடந்த 13-ஆம் தேதி நாம் அனைவரும் பார்த்தோம். கர்நாடகக் காங்கிரஸ் அலுவலகம் விழாக்கோலமாக இருந்தது. கர்நாடக மாநிலத் தேர்தலின் வெற்றி காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்குப் புத்துணர்வளித்திருக்கிறது. அடுத்தடுத்த மாநிலத் தேர்தல்களை நம்பிக்கையுடன் சந்திக்கும் வாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இந்தத் தேர்தல் வெற்றி மகிழ்ச்சியைத் தந்திருக்கின்றன.

2014-ஆம் ஆண்டு மோடி அலையின் காரணமாக மத்தியில் ஆட்சியைப் பிடித்தது பாஜக. அதைத் தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு நிலவரப்படி 17 மாநிலங்களில் ஆட்சியைத் தக்க வைத்தது. அதன்பிறகு காட்சிகள் மாறத் தொடங்கின. ஆனாலும் பல மாநிலங்களில் மத்தியிலிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சியமைத்தது. மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக நடத்திய உள்ளடி அரசியல் அவற்றிற்கு ஒரு சான்று.

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நடைபெறும் ஒவ்வொரு மாநிலத் தேர்தலும் இரு பிரதானக் கட்சிகளுக்கும் முக்கியமானது. பிரதமர் மோடி தேர்தலுக்கு முன் எட்டு முறை கர்நாடகாவிற்கு வந்து பல திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இருபதுக்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார். பெங்களூருவில் 33 கிலோமீட்டர் தூரம் உள்படப் பல ரோட் ஷோ நடத்தி வாக்குகளைக் கேட்டார். ஆனால், மக்கள் வேறு முடிவிலிருந்ததை தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • சிறப்பான பார்வை பாண்டியன் .. ஆரவாரமில்லாத எளிமையான எழுத்து வெகுவாகக் கவர்கிறது .. தொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!