Home » ஒடிசா ரயில் விபத்து: தடம் புரள்வது எது?
இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: தடம் புரள்வது எது?

எது தண்டவாளம், எது எந்த ரயில்களின் பெட்டி எனத் தெரியாதவாறு அந்த இடமே உருக்குலைந்து போயிருந்தது. ரயில் பெட்டிகள் ஒன்றின் மீதொன்றாக ஏறி நின்றிருந்தன. சில பெட்டிகள் பக்கவாட்டில் கவிழ்ந்து கிடந்தன. சில பெட்டிகள் தூக்கித் தனியே வீசப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளுக்குள் இருந்த பயணிகள் பலரும் இடிபாடுகளில் சிக்கியிருந்தனர். அந்த இடமெங்கும் அலறல் சத்தம். சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் சத்தங்களும், வாகன இரைச்சல்களும் சூழ்ந்திருந்தன. ரயில் சத்தம் தவிர வேறெந்த சத்தமும் வந்திராத அந்த இடத்தை நோக்கி அருகிலிருந்த கிராம மக்கள் ஓடத் தொடங்கினர். ஜூன் 2ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஒடிஷாவில் நடந்த மூன்று இரயில்கள் மோதிய விபத்துக் காட்சிகள் இவை.

இதுவரை 275 பேர் பலியாகியிருக்கிறார்கள். 1000க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்திருக்கின்றனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் சூழலிருக்கிறது. 100 உடல்கள் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அரசு மருத்துவமனைகளின் பிணவறை முன்பு இறந்துபோன பயணிகளின் உறவினர்கள் உடலை அடையாளம் காணக் காத்திருக்கிறார்கள். இன்னும் பலர் பல மாநிலங்களிலிருந்து விபத்து நடந்த இடம் நோக்கிச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!