உலகம் முழுவதும் நாளாந்தம் ஏதோவொரு பண்டிகை நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கிறது. வரலாற்றில் மனிதர்கள் பரவலடைந்து வாழத்தொடங்கிய இடங்களிலெல்லாம் அவர்கள் பல காரணங்களுக்காக பண்டிகைகளை கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் பண்டிகைகள் வேதங்களில் வருகிற ஸ்லோகங்களை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. மனிதன்...
Author - நர்மி
மலைகளுக்கு உயிரில்லையென யார் சொன்னது? அவை மட்டுமே இந்த உலகின் நெடுநாள் சாட்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை நான் நம்புகிறேன். மலைகளைக் கடக்கின்ற சுவை பிடிபட வேண்டும். அது இந்த வாழ்க்கைக்குப் புதிய புதிய நம்பிக்கைகளையும், கனவுகளையும் கொண்டுவந்து சேர்க்கக் கூடும். புதிய புதிய வானங்களையும்...
நம் மக்கள் சிறிது யோசித்துவிட்டுத்தான் ரசிப்பார்கள். ஆனால் ஓர் அழகு என்பது எங்கிருந்தாலும் அழகுதானே. இலங்கையின் சிங்கள, பௌத்தக் கிராமங்களுக்கென தனித்த அழகு ஒன்று இருக்கிறது. தூரத்திலிருந்து அந்தக் கிராமங்களை அண்மிக்கும் போது உங்களுக்கு முதலில் சமவெளியான வயல்வெளிகள் தெரியலாம். வயல்வெளிகளை ஊடறுத்துச்...
அந்தக் காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்கக் கால்கள் கற்றுத் தருகின்றன, நீண்டு நடக்கவும், நிலைத்து நிற்கவும். இயற்கையின் பிரமிக்கிற அடைவுகளின் முன், பாதைகளின் முன் நான் மௌனித்து...
இந்தியாவை, அதன் மாநிலங்களை, அதன் கலை, கலாசார, பாரம்பரியங்களை, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அந்த நிலத்தில் செழித்து வளர்ந்த பண்பாடுகளை, வாழ்வைத் துறந்து நடந்த மனிதர்களின் கால் தடங்களை, அவர்கள் ஆண்டாண்டு காலம் போதித்து நடந்த தத்துவங்களைப் பின்பற்றி நடக்க விரும்பினேன். பட்டப்படிப்பின் பின், ஒரு தொழில்...
நுவரெலியாவுக்குப் புதிதாக வருகிறீர்களா? உங்கள் கையில் இருக்க வேண்டியது சுற்றுலா விவரப் புத்தகமல்ல. கம்பராமாயணம். இங்கே ஒரு கோயில் இருக்கிறது. ‘சீதாஎலிய’ அம்மன் கோயில். நமக்கு முன்னால் – ராமாயண காலத்தில் ராமருக்கும் ஆஞ்சநேயருக்கும் முன்னால் இலங்கைக்கு வந்தவளல்லவா சீதை? அந்தத் தொடர்பு...
மார்கழி மாதக் கடுங்குளிரும், பனியும் மேட்டு லயத்தையும், லயத்தை அண்மித்து நின்ற மலைத் தொடர்களையும் முழுமையாக மறைத்துவிட்டிருந்தது. லயன் குடியிருப்புகளின் சில்லிடுகிற நிலத்தின் குளிர்ந்த தன்மை மாற சூரியன் வரவேண்டும். அதுவரை உடலை நடுக்குகின்ற குளிரை தாங்க முடியாது இருந்தது. மேட்டு லயத்தின் முன்...
மனிதர்கள் சில இடங்களில் வாழ்ந்துவிட நினைக்கிறார்கள். சிலர் வாழ்ந்தும் விடுகிறார்கள் அல்லது ஒவ்வொருவரும் வாழ விரும்பும் வாழ்க்கையைப் பார்க்கிறார்கள். அதன்பின் அந்த இடத்தைத் தாம் மரணிக்கும் வரை தம்முடனேயே கொண்டு செல்கிறார்கள். நான் நினைக்கிறேன்- அதிகளவில் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் அப்படி ஒவ்வொரு...
சென்னை புத்தகத் திருவிழா. வாசிப்பின்வழி தம்மை ஆக்கிரமித்த எழுத்தாளர்களை ஒரு வாசகன் தேடிக் கண்டடைவதும், அவர்களை முதன்முதலில் கண்ட போது, அந்தக் கணம் மனதில் எழுகிற பரவச நிலையைச் சொல்லில் விவரிக்க முடியாது. அச்சிதழ்கள் மூலம் ஓர் எழுத்தாளனின் படைப்பை வாசித்து, கடிதங்கள் வாயிலாக அவர்களைத் தொடர்பு கொண்ட...
பிரித்தானியர்கள் 18-ம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில், 1795-ம் ஆண்டளவில் இலங்கையின் அனேகமான பகுதிகளைக் கைப்பற்றி விட்டனர். இருப்பினும் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அவர்களால் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற முடிந்தது. கண்டி அவர்கள் வசம் வந்ததன் பிறகு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற இடம் அது...