இந்தியாவை, அதன் மாநிலங்களை, அதன் கலை, கலாசார, பாரம்பரியங்களை, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அந்த நிலத்தில் செழித்து வளர்ந்த பண்பாடுகளை, வாழ்வைத் துறந்து நடந்த மனிதர்களின் கால் தடங்களை, அவர்கள் ஆண்டாண்டு காலம் போதித்து நடந்த தத்துவங்களைப் பின்பற்றி நடக்க விரும்பினேன். பட்டப்படிப்பின் பின், ஒரு தொழில் கிடைத்துவிட்ட பின்னரும் வீடு, தொழில், திருமணம், நண்பர்கள், என்று பாதுகாப்பான வாழ்வு எல்லாவற்றையும் விட்டு, வாழ்வில் ஒரு தடவையேனும், நான் பயணிக்க விரும்பினேன். எனக்கான உலகம் இந்தியாவிற்குள் தொடங்குவதாக நினைத்தேன். அதன்படி நான் தேடியலைந்தததும் கண்டடைந்ததும்தான் என் இந்திய பயணங்கள்.
இதைப் படித்தீர்களா?
“உங்களுக்குப் பாஸ்வேர்ட் ஸ்ட்ரெஸ் இருக்கா?” இப்படியொரு கேள்வி நூதனமாய்த் தெரியலாம். ஆனால் சமீப காலங்களில் இக்கேள்வி பரவலாகி வருகிறது. ஒரு சராசரி...
உங்க ஊரில் மயில் குரைத்ததா? எங்கள் ஊரில் யானை ஊளையிட்டது. ‘கோட் – வேர்ட்’ கரெக்ட் என்று கூறி பெட்டிகளை மாற்றிக் கொண்டு எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்து...
Add Comment