உலகம் முழுவதும் நாளாந்தம் ஏதோவொரு பண்டிகை நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கிறது. வரலாற்றில் மனிதர்கள் பரவலடைந்து வாழத்தொடங்கிய இடங்களிலெல்லாம் அவர்கள் பல காரணங்களுக்காக பண்டிகைகளை கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் பண்டிகைகள் வேதங்களில் வருகிற ஸ்லோகங்களை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. மனிதன் இயற்கையோடு இணைந்து காடுகளில் வாழத்தொடங்கிய வாழ்க்கையை ஞாபகப்படுத்தியது. முதன்முதலில் அவன் இந்த இயற்கையின் பிரமாண்டத்திற்கு முன்னே பயந்து, இது கடவுளாக இருக்குமோ, அல்லது இது கடவுளாக இருக்குமோ என மலைகள், மரங்கள், நீர்நிலைகள், பாம்பு, விலங்குகள், இடி, மின்னல், மழை,நெருப்பு, நிலம், சூரியன், சந்திரன் என தாம் வியந்து கண்டவைகளை, அல்லது தமக்கு அச்சுறுத்தலும், பயத்தையும் தந்தவற்றை வணங்க தொடங்கிய காலம் பண்டிகைகளின் வரலாற்றில் மிக முக்கியமான தொடக்கபுள்ளியாக இருக்க வேண்டும்.
இதைப் படித்தீர்களா?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவ்வப்போது ஆளுநர் பேசுபொருளாகாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அதன்படி இப்போதும் பேசுபொருளாகியிருக்கிறார். ஆக்கியது, ஆன்லைன்...
41. பராக்கு – 2 தமிழ் மாலும் ஹே? என்கிற குரல் இரண்டு, மூன்றாவது தடவையாக ஒலித்தபோதுதான், இந்தி பிரசார சபாவின் விஸ்தாரமான வகுப்பறையின்...
Add Comment