மக்களுக்கு மட்டுமா கஷ்டம்? இலங்கையில் மக்கள் அளவுக்கே பாடுபடுவது, இங்கே பாடப்படும் தேசிய கீதம். உலகின் வேறெந்த நாட்டிலும் தேசிய கீதத்தை முன்வைத்து இவ்வளவு பஞ்சாயத்து இருந்ததில்லை. தமிழில் தேசிய கீதத்தைப் பாடலாமா கூடாதா என்ற சர்ச்சைக்கும் இலங்கையின் சுதந்திரத்திற்கும் கிட்டத்தட்ட ஒரே வயது...
Author - ஸஃபார் அஹ்மத்
‘பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் விமான நிலையம் இருக்கிறது’ என்ற பெயர்ப் பலகையும், ‘வன யானைகள் குறுக்கிடும் பகுதி, கவனம்’ என்று கிலி பிடிக்க வைக்கும் இன்னொரு அறிவித்தல் பலகையும் அடுத்தடுத்து நடப்பட்டிருந்தால் விமானநிலையத்திற்குச் சென்று கொண்டிருக்கும் பயணிக்கு எப்படியிருக்கும்...
2018ம் ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கான் வெற்றி பெற்றதில் இருந்து ஜே.வி.பி (ஜனதா விமுக்தி பெரமுன)க்கு ஒரு அசகாய நம்பிக்கை வந்தது போல இருந்தது. அவர்களது தொண்டர்கள் எல்லாம் தினமும் இந்த வெற்றியைப் பற்றியே பிரஸ்தாபித்தார்கள். பாகிஸ்தானில் இருபெரும் கட்சிகளையும் புறம் தள்ளிவிட்டு...
மூக்குக் கண்ணாடியைக் கழற்றி கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர். ப்ளாஷ் வெளிச்சங்கள் மின்னின. பாவமன்னிப்புப் படலம் ஆரம்பமாகியது. ‘2005ம் ஆண்டு நான் ஒரு சின்னத் தப்பு செய்துவிட்டேன் மக்களே..! சுனாமி நிதியை மோசடி செய்ததாய் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர்...
‘ஜானி’ இங்கிலீஷ் திரைப்படத்தில் மிஸ்டர் பீன் யாரும் எதிர்பாராத விதமாக மன்னரின் கிரீடத்தைத் தட்டிப் பறித்து முடிசூடுவது போன்ற ஒரு காட்சி வரும். அதற்குச் சற்றும் குறையாததுதான் பாராளுமன்றத்தில் ஒரே ஒரு மந்திரியாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகத் தேர்வான பெரும் தலைவர் அற்புத ஜோதி, லிபரல் ஜனநாயக மாணிக்கம்...
ஜூலை 9ம் தேதி புரட்சி நடந்தது. அதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பற்றிய எந்தத் தகவலும் யாருக்கும் தெரியவில்லை. என்னதான் ஆனார்? எங்கே போனார்? ஒன்பதாம் தேதி சனிக்கிழமை வரலாறு காணாத மக்கள் வெள்ளம் ஜனாதிபதி மாளிகையின் கேட்டை உடைத்துக் கொண்டு உட்புகும் கணத்திற்குச் சற்று முன்னர் வரை அவர்...
இலங்கையில் நடந்த மக்கள் புரட்சியின் நேரடி வருணனை. கோட்டபாய ராஜபக்ச ‘பதவி விலகுவதாக’ அறிவித்தது அநாவசியமானது; உண்மையில் அவர் மக்களால் நீக்கப்பட்டிருக்கிறார் என்பதைப் புரிய வைக்கிறது இக்கட்டுரை. ‘கோட்டா கோ ஹோம்’ என்று தொண்டை கிழியக் கத்தினது எல்லாம் போதும். இனி முடிவைப் பார்த்துவிடலாம்.’...
இலங்கையின் இன்றைய மோசமான அரசியல்-பொருளாதாரச் சூழல் தமிழர்களை எவ்வகையில் பாதித்திருக்கிறது என்று ஆராய்கிறது இக்கட்டுரை. என் மக்களுக்கு எரிபொருள் வழங்க முடியாது என்று உலகத்தில் பிரகடனப்படுத்திய ஒரே நாடு என்ற சாதனையை இலங்கை கடந்த வாரம் பதித்தது. ‘ஜுலை மாதம் 22ம் தேதி வரை எந்த எரிபொருள் கப்பலும்...
புரட்சிகர இயக்கமாகத் தோன்றி, இடதுசாரி அரசியல் இயக்கமாக உருப் பூண்டு இலங்கையில் இயங்கும் ஜனதா விமுக்தி பெரமுன, அடுத்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிடுமா? 1971 ஏப்ரல் 5. புரட்சிக்குத் தேதி குறித்தாயிற்று. தேசம் முழுக்க இருக்கும் அத்தனை போலிஸ் ஸ்டேஷன்களையும் தகர்த்து ஆயுதங்களைக் கொள்ளையடித்து...
காலி முகத் திடல் ஆர்ப்பாட்ட பூமியில் அந்த சிங்கள இளைஞர் உரையாற்றிக் கொண்டிருந்தார். ‘நாங்கள் இப்போது அனுபவிக்கும் அத்தனை நெருக்கடிகளும் வடக்கு கிழக்கில் தமிழர்களின் கதவுகளை எப்போதோ தட்டியவைதான். 1996ம் ஆண்டு நாங்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் சாம்பியன்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த போது அங்கே...