புரட்சிகர இயக்கமாகத் தோன்றி, இடதுசாரி அரசியல் இயக்கமாக உருப் பூண்டு இலங்கையில் இயங்கும் ஜனதா விமுக்தி பெரமுன, அடுத்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிடுமா?
1971 ஏப்ரல் 5. புரட்சிக்குத் தேதி குறித்தாயிற்று. தேசம் முழுக்க இருக்கும் அத்தனை போலிஸ் ஸ்டேஷன்களையும் தகர்த்து ஆயுதங்களைக் கொள்ளையடித்து ஒட்டுமொத்த டிபார்ட்மெண்டையும் நிர்மூலமாக்க வேண்டும். புரட்சித் தீ இப்படி எரிந்து கொண்டிருக்கும் போது அராஜகமே தேசிய அடையாளமாய் மாறிவிடும். சிவப்புச் சட்டையுடன் மிச்ச சொச்ச தோழர்கள் செங்கம்பளத் தரையில் நடந்து சென்று பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டும். ஆட்சி நமதே.
அன்றைய தேதியில் ஜனதா விமுக்தி பெரமுன என்ற தீவிர இடதுசாரி இயக்கம் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசைக் கவிழ்க்கத் தீட்டிய சதி இது. ஆனால் சதியைத் திறம்பட நடத்த முடியாமல் விதி கம்யூனிகேஷன் குளறுபடி என்ற பேரில் வந்தது. ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைவர் ரோஹன விஜேவீர கச்சேரிக்கு சுபநேரமாக இரவு பத்து மணியைத் தேர்ந்தெடுத்து இருந்தார். ஆனால் பாதி தோழர்களுக்கு இரவு பகல் குழப்பம் ஏற்பட்டு காலை பத்து மணியைத் தேர்ந்தெடுத்து மஞ்சள் வெயிலில் ஆட்சியைக் கைப்பற்றத் துடித்தனர். அந்தக் காலத்தில் துண்டுச் சீட்டு ஒன்று தான் அத்தனை பேரையும் ஒருங்கிணைக்கும் ஆபத்பாந்தவன். வாட்ஸப்பிலேயே வதந்தி பரவும் போது வெறும் துண்டுச் சீட்டு என்ன செய்யும். அதுவும் எந்தவித தொடர்பாடலுமில்லாமலேயே பங்களாதேஷ் உருவான வருஷம் அல்லவா?
Very well narrated. Clearly and neatly with interesting comparisons. Way to go Zafar! Excellent!