Home » Archives for ஸஃபார் அஹ்மத் » Page 11

Author - ஸஃபார் அஹ்மத்

Avatar photo

அரசியல் வரலாறு

கொல்லாத குண்டும், சில பொல்லாத உண்மைகளும்

பாகிஸ்தானின் சரித்திரத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எந்த ஒரு பிரதமரும் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்ததே இல்லை. பாராளுமன்றம் கூடும் போது பிரதமர்கள் மாறின விசித்திரம் எல்லாம் ஐம்பதுகளில் நடந்தது. எந்த நேரத்தில் யார், யாரைக் கவிழ்ப்பார்கள் என்று புரியாத ஒரு பரபரப்பு அது. இம்ரான்கான் 2018-ம் ஆண்டு...

Read More
இலங்கை நிலவரம் உலகம்

இலங்கையின் தற்காலத் தமிழர் அமைப்புகள்: இடமும் இருப்பும்

இலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் புலிகளின் காலத்துக்குப் பிறகு அவர்களுக்குக் குரல் இருக்கிறதா? தமது குரலை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வதற்கும் ராஜதந்திர ரீதியில் சர்வதேசத்தை எதிர்கொள்ளவும் புலிகளுக்கு அரசியல் முகம் ஒன்று தேவைப்பட்டது. விளைவு 2001-ம் ஆண்டு அன்றைய முன்னாள் போராளி...

Read More
இலங்கை நிலவரம் உலகம்

யாப்புக்கு வைப்போமடா ஆப்பு!

எங்கோ அநாதரவாய்க் கிடந்த அரச வர்த்தமானியொன்றில் இலங்கை வான்படையின் ஏதோ ஒரு தரத்திற்கு ஆட்சேர்ப்பு பற்றிய விளம்பரம் இருந்தது. யாரும் சட்டென்று புரிந்து கொள்ளக் கூடாது என்கிற உன்னத நோக்கத்துடன் விசேடமான தமிழில் நிபந்தனைகள் அச்சேறியிருந்தன. விண்ணப்பதாரி கண்டிப்பாய் இலங்கைப் பிரஜையாய் இருக்க வேண்டும்...

Read More
இலங்கை நிலவரம் உலகம்

பிச்சைக்கார லட்சாதிபதிகள்

தொண்ணூற்று மூன்று சதவீத எழுத்தறிவு, எழுபத்தாறு ஆண்டுகள் என்ற சராசரி ஆயுள் காலம், மனித அபிவிருத்திச் சுட்டெண் என்றழைக்கப்படும் ‘Human Development index’ இல் ஆசியாவில் முதலாவது இடம், சுற்றிவரக் கடல் வளம்,எதை விதைத்தாலும் பிழைத்துக் கொள்ளுமளவுக்கு விதவிதமான சீதோஷ்ண நிலையுடன் கூடிய ஒன்பது...

Read More
இலங்கை நிலவரம் உலகம்

ரணில்: சொன்னது என்ன? செய்தது என்ன?

‘சர்வதேச நாடுகள் எல்லாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அச்சத்துடன் பார்க்கின்றன. அவரோடு கவனமாகவே கொடுக்கல் வாங்கல் செய்கின்றன. நமது நாடும் செழிப்புற்று வருகிறது. இன்று உலக அரங்கில் உலாவி வரும் அதிகாராதிபதிகளில் எமது தலைவரும் ஒருவர்.’ என்று ஜனாதிபதி ரணிலின் ஆஸ்தான அல்லக்கைகளில் ஒருவரான...

Read More
உலகம்

ஈரானும் ஹிஜாபும்: இருண்ட கால நாட்குறிப்பு

கடந்த மூன்று வாரங்களாக ஈரான் கொதித்துக் கொண்டிருக்கிறது. இப்போது வரை (திங்கள் பிற்பகல் 02.30) தொண்ணூற்றிரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தலைநகர் தெஹ்ரான் உட்பட நாற்பது நகரங்களில் போராட்டங்கள் உச்சம் பெற்றுள்ளன. இண்டர்நெட் சேவையை அரசு முடக்கியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கலவரம். எல்லாப்...

Read More
உலகம்

பீன்ஸ் தின்னும் சாத்திரங்கள்

கருங்கல் பாறை போன்று இறுகிய முகத்துடன் வடகொரிய அதிபர் கிம் ஜோ உன் அந்தப் பிரமாண்டமான ஹாலுக்கு வந்து கொண்டிருந்தார். கூட்டம் எழுந்து நின்று வேகவேகமாய் கைதட்டத் தொடங்கியது. கிம் தன் ஆசனத்திற்கு வந்து பார்வையால் கும்பலைக் கழுவியவாறு பேசத் தொடங்கினார். ஜெனரல்கள், பிரிகேடியர்கள், கேணல்கள் என்று அவரவர்...

Read More
உலகம்

‘ஏஞ்சல்’: ஒரு டபுள் ஏஜெண்ட்டின் கதை

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு உக்கிரமடைந்து வருகிறது. அமெரிக்கா தொடங்கி, அநேகமாக அனைத்து மேலை நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக நின்று, ரஷ்யாவின் அநியாய ஆக்கிரமிப்பைக் கண்டித்து வருவது உலகறியும். இந்தச் சூழ்நிலையில் எட்வர்ட் ஸ்நோடவுன் என்கிற ஓர் அமெரிக்க உளவாளி ரஷ்ய ராணுவத்துக்கு உதவி செய்யப்...

Read More
உலகம்

மிக்கைல் கோர்பசேவ்: ஒரு காக்டெய்ல் கனவு

சோவியத் யூனியனின் சிதைவுக்குக் காரணம் என்று பெரும்பாலான ரஷ்யர்களாலும் அதிபர் புதினாலும் சுட்டுவிரல் நீட்டப்படும் முன்னாள் சோவியத் யூனியனின் அதிபரும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான மிக்கைல் கோர்பசேவ் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி இயற்கை எய்தினார். நிறை வாழ்வுதான். சந்தேகமில்லை. புதின் அவரது...

Read More
இலங்கை நிலவரம் உலகம்

அதிகாராதிபதி

உலகில் வேறெந்த நாட்டு ஜனாதிபதிக்கும் இவ்வளவு அதிகாரங்கள் இருக்காது. இலங்கை ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள் எல்லை கடந்தவை. ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்திரண்டாம் ஆண்டு இலங்கை குடியரசானபோது முதலாவது அரசியல் யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. கவர்னர் ஜெனரலாய் இருந்த வில்லியம் கோபல்லாவ என்பவர் ஜனாதிபதியாகிக்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!