கடந்த மூன்று வாரங்களாக ஈரான் கொதித்துக் கொண்டிருக்கிறது. இப்போது வரை (திங்கள் பிற்பகல் 02.30) தொண்ணூற்றிரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தலைநகர் தெஹ்ரான் உட்பட நாற்பது நகரங்களில் போராட்டங்கள் உச்சம் பெற்றுள்ளன. இண்டர்நெட் சேவையை அரசு முடக்கியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கலவரம். எல்லாப் பக்கமும் பதற் . பெண்கள் தங்கள் ஹிஜாபை கழற்றி எரித்துக் கொண்டிருக்கிறார்கள். முடியை வெட்டி எறிந்து எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டம் படிப்படியாக வலுவுற்று உலகம் முழுக்க வாழும் ஈரானியர்களின் ரத்த நாளங்களுக்குள்ளும் ஊடுருவி இருக்கிறது. ஐரோப்பிய நகரங்களில் இருக்கும் ஈரானியத் தூதரகங்கள் தினமும் போராட்டக்காரர்களால் அதிர்ந்து கொண்டிருக்கின்றன.
இதைப் படித்தீர்களா?
சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை...
நீலகிரியில் வடகிழக்குப் பருவமழையைப் பார்த்தவன் எவனும் நாத்திகனாக இருக்கமுடியாது. காற்றும், மழையும் இணைந்து பிரவகிக்கும்போது மனது இயற்கையின்...
Add Comment