♠ தேவன் நானும் என் ராஜமும் மைத்துனியின் கல்யாணத்திற்குச் சென்று விட்டு உத்தமர் கோவிலிலிருந்து ரயிலில் திரும்பி வந்து கொண்டிருந்தோம். ஏதோ ஒரு ஸ்டேஷனில் (பெரிய மனுஷர்களைப் போல் இந்த இடத்தில் எனக்கும் ஞாபகம் வர மறுக்கிறது!) பிளாட்பாரத்தின் எதிர்ப் புறமாக இரண்டு சின்னப் பயல்கள் வண்டிக்குள் தாவினார்கள்...
Author - மெட்ராஸ் பேப்பர்
புத்தாண்டு தொடங்கும் போதே சென்னை புத்தகக்காட்சியும் தொடங்கியிருக்கிறது. கடந்த நாற்பத்தேழு ஆண்டுகளாகச் சென்னையின் கலாசார அடையாளங்களுள் தலையாயதாக இது மாறியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தருவது. வருடா வருடம் புத்தகக் காட்சிக்கு வரும் கூட்டம் உயர்ந்துகொண்டே செல்வதாக ஒவ்வோராண்டும் சொல்கிறார்கள். அதற்கு...
ஜான் ஸ்டெய்ன்பெக் தமிழில்: தி.அ. ஶ்ரீனிவாஸன் புனைவு என்னும் புதிர் கட்டுரை: மாமல்லன் இளைஞனான டாக்டர் பிலிப்ஸ் சாக்குப் பையைத் தோளில் போட்டுக்கொண்டு கடலிலிருந்து திரும்பியபோது கிட்டத்தட்ட இருட்டியிருந்தது. பாறைகளின் மேல் தாவி ஏறிச்சென்று, தெருவில் இறங்கி ரப்பர் காலணி சாலையை உரசியபடி விரைந்தான்...
ஆண்டிறுதி என்றாலே சில அசம்பாவிதங்கள் நிகழ்வது வழக்கமாகிப் பல வருடங்களாகிவிட்டன. இம்முறை உத்தர்கண்ட் சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் நல்லபடியாக மீட்கப்படுவார்களா என்று கவலைப்படத் தொடங்கி, சென்னை வெள்ளம், தென் மாவட்ட வெள்ளம் வரை ஒரு பெரும் ஆட்டம் ஆடித் தீர்த்துவிட்டது. சரி, இனி சற்று மூச்சு...
கேப்ரியேல் கார்சியா மார்கேஸ் ஆங்கிலத்தில்: J.S. Bernstein தமிழில்: தி. அ. ஶ்ரீனிவாசன் (அச்சுதன் அடுக்கா) புனைவு என்னும் புதிர் கட்டுரை: விமலாதித்த மாமல்லன் ஜோஸ் மாண்டியல் இறந்தபோது அவரது மனைவியைத் தவிர எல்லோரும் வஞ்சம் தீர்க்கப்பட்டதாக உணர்ந்தார்கள். ஆனால், அவர் உண்மையிலேயே இறந்துவிட்டார். என்று...
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்திருக்கும் மழையை வரலாறு காணாத மழை என்று சொல்கிறார்கள். வானிலை மைய இயக்குநர், இப்படியொரு மழையை என் பணிக்காலத்தில் கண்டதில்லை என்கிறார். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு நாளில் பதிவான மழையின் அளவு ஓராண்டு முழுவதும் பெய்திருந்தாலும் வந்திருக்க...
மீண்டும் ஒரு உச்சநீதி மன்றத் தீர்ப்பு பேசுபொருளாகியிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு நீக்கியதை அடுத்துத் தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டிருக்கிறது. அரசின் நடவடிக்கை சரியே என்பது...
இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்மூலம் ரோமிலிருந்து புறப்பட்ட பயணிகள், பிரதான மார்க்கத்தை சல்மோனாவுடன் இணைக்கும் பழங்கால உள்ளூர் வண்டியில் தங்கள் பயணத்தைத் தொடர ஃபேப்ரியனோ என்ற சிறிய நிலையத்தில் விடியும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. விடியற்காலையில், ஏற்கனவே இரவைக் கழித்திருந்த ஐந்து பேர், புழுக்கமும்...
சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை மழை என்று அறிவிக்கப்பட்டுவிட்டால் வேறு சிந்தனையே இல்லாமல் அதைக் குறித்து மட்டுமே பேசுவது சென்னை மக்களின் பழக்கம். அப்படி ஆண்டுக்கொரு முறை வருகிற மழையும்...
மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் ஏன் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை? என்றால், மத்தியில் ஆளும் கட்சி மாநிலத்தில் ஆளாத பட்சத்தில் ஆளுநர் ஓர் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சியாகிவிடுவதே காரணம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு சட்ட மன்றத்தில் செயல்படும் எதிர்க்கட்சிகள்கூட அத்தியாவசிய...