Home » பாம்பு
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

பாம்பு

ஜான் ஸ்டெய்ன்பெக்
தமிழில்: தி.அ. ஶ்ரீனிவாஸன்
புனைவு என்னும் புதிர் கட்டுரை: மாமல்லன்


இளைஞனான டாக்டர் பிலிப்ஸ் சாக்குப் பையைத் தோளில் போட்டுக்கொண்டு கடலிலிருந்து திரும்பியபோது கிட்டத்தட்ட இருட்டியிருந்தது. பாறைகளின் மேல் தாவி ஏறிச்சென்று, தெருவில் இறங்கி ரப்பர் காலணி சாலையை உரசியபடி விரைந்தான். மாண்டெரிய் பகுதியில் பீப்பாய்கள் செய்யும் தெருவிலிருந்த அவனது சிறிய வணிகப்  பரிசோதனைக் கூடத்திற்கு அவன் வந்தபோது தெருவிளக்குகள் எரியத் துவங்கியிருந்தன. அது ஒரு கச்சிதமான சிறிய கட்டடம். அதன்  ஒரு பாகம் கடலில் எழுப்பப்பட்டிருந்த தூண்களின் மீதும் மற்ற பாகம் நிலத்தின் மீதுமிருந்தன. அதன் இருபுறமும் தகரப் பீப்பாய் தயார் செய்யும் ஆலைகள் நெருக்கமாக இருந்தன.

டாக்டர் பிலிப்ஸ் மரப்படிகளில் ஏறிச்சென்று கதவைத் திறந்தான். கூண்டுகளில் கிடந்த வெள்ளெலிகள் கூண்டுக்கம்பிகளில் மேலும் கீழும் ஓடிக்கொண்டிருந்தன. வளைகளில் போடப்பட்டிருந்த பூனைகளோ பாலுக்காகக் கத்தின. டாக்டர் பிலிப்ஸ்  பரிசோதனை மேசையின் உயரேயிருந்த மிகப்பிரகாசமான விளக்கைப் போட்டு, தோளிலிருந்த ஈரமான சாக்குப் பையைத் தரையில் வைத்தான். ஜன்னலுக்கு அருகில் சாரைப்பாம்புகள் கிடந்த கண்ணாடிக் கூண்டுகளின் அருகில் சென்று, குனிந்து நோட்டம்விட்டான்.

பாம்புகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து கூண்டின் மூலைகளில் சுருண்டு கிடந்தன; ஆனாலும் அவை ஒவ்வொன்றின் தலைகளும் தெளிவாகத் தெரிந்தன. அவற்றின் வறண்ட கண்கள் எதையும் பார்ப்பதுபோலத் தோன்றவில்லை. ஆனால் அவன் குனிந்தபோது, நுனியில் கறுத்தும் அடிப்பாகம் சிவந்துமிருந்த அவற்றின் இரட்டை நாக்குகளை வெளிக்காட்டி மேலும்கீழும் மெதுவாக அசைத்தன.  பின்னர் அவனை அடையாளம் கண்டுகொண்டு நாக்குகளை உள்ளிழுத்துக் கொண்டன.

டாக்டர் பிலிப்ஸ் தோலாலான தனது மேல்கோட்டை  எடுத்து எறிந்துவிட்டு அடுப்பைப் பற்றவைத்தான். அதன்மேல் ஒரு கெட்டிலில் நீரைவிட்டு ஒரு பீன்ஸ் டப்பாவை வைத்தான். கொஞ்ச நேரம் தரையில் கிடந்த சாக்கையே பார்த்தபடி நின்றான். அவனுக்கு வயது அதிகமொன்றுமில்லை. மைக்ரோஸ்கோப்பை சதா சர்வ காலமும் பார்த்துக் கொண்டிருப்பவனது கண்கள்போல் இருந்தன அவனது கண்கள். கொஞ்சம் தாடியும் வைத்திருந்தான்.

அடுப்பு சூடேறி அதிலிருந்து வெம்மை அறையில் பரவியது. கூடத்தின் கீழே சிறிய அலைகள் தூண்களைக் கழுவிச் சென்றன. அந்த அறையிலிருந்த ஷெல்புகளின் ஒவ்வொரு அடுக்கிலும்  கடல் பிராணிகளின் ஸ்பெஸிமன்கள் ஜார்களில் வைக்கப்பட்டிருந்தன.

டாக்டர் பக்கவாட்டிலிருந்த கதவைத் திறந்து அவனது படுக்கையறைக்குச் சென்றான். புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த அந்த அறையில் ஒரு ராணுவக் கட்டில், ஒரு விளக்கு மற்றும் சௌகரியக் குறைவான ஒரு மர நாற்காலி ஆகியவை இருந்தன. ரப்பர் பூட்ஸ்களை கழற்றிவிட்டு ஆட்டுத்தோலினாலான காலணிகளைப் போட்டுக்கொண்டான். அடுத்த அறைக்குள் நுழையும்போது கெட்டிலிலிருந்த நீர் கொதிக்கத் துவங்கியிருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!