Home » Archives for March 2024

இதழ் தொகுப்பு March 2024

நம் குரல்

விரும்பாத ஒன்றும் இல்லாத ஒன்றும்

பிரதமர் திரும்பத் திரும்பத் தமிழ்நாட்டுக்கு வருகிறார். நாடு முழுதும் பல முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது நாலாபுறங்களிலும் இருந்து வழக்குப் பிடிகள் இறுக்கப்படுகின்றன. டெல்லி முதலமைச்சர் கைது செய்யப்படுகிறார். இவற்றையெல்லாம் பார்த்து, பாரதிய ஜனதா பதற்றத்தில் செயல்படுகிறது; தோல்வி பயத்தில்...

Read More
இந்தியா

தெலுங்கானா தேர்தல் ரவுண்ட் அப்

கே.சந்திரசேகர ராவ் பதினொரு நாள்கள் உண்ணாவிரதம் இருந்ததும் தெலுங்கானா மாநிலம் உருவானதும் நம் சமகாலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு. பத்தே வருடத்தில் அது பழங்கதையாகிப் போனதையும் நாம் பார்க்கிறோம். சந்திரசேகர ராவ் கட்சி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கரைந்து கொண்டிருக்கிறது. இளைஞர் காங்கிரஸில் இருந்து...

Read More
உலகம்

மீண்டும் ஐ.எஸ்: ரஷ்யாவைக் குறி வைத்தது எதனால்?

“எல்லோரும் மண்டியிடுங்கள். இல்லாவிட்டால் கொன்றுவிடுவோம் என யாரும் மிரட்டவில்லை. துப்பாக்கியை மேலே உயர்த்திச் சுடவுமில்லை. அரங்கிற்குள் நுழைந்தார்கள். எதுவும் பேசாமல் குறிபார்த்து மக்களைச் சுட்டார்கள். சுடும் சத்தத்தின் எதிரொலி கேட்டுக்கொண்டே இருந்தது. ஒன்றும் புரியவில்லை. நிஜமாகவே அதிர்ஷ்டம்...

Read More
தமிழ்நாடு

கழகக் குடும்பமும் குடும்பக் கழகமும்

“சார் நாம ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போறோம். அந்தக் கம்பெனிக்கு முதலாளியாகணும்னு நமக்கு லட்சியம் இருக்கலாம். அதுக்காகப் பாடுபடலாம். ஆனா அந்த முதலாளி அத ஒத்துக்குவாரா..? நாம முதலாளியாகணும்னா நாம தனியா வந்து கம்பெனி ஆரம்பிச்சு முதலாளியாயிட வேண்டியதுதான். அது தானே யதார்த்தம். எங்க கட்சியிலும்...

Read More
சமூகம்

பனையும் பயிற்சியும்

கோடைவந்தால் புதிய புதிய குளிர்பானக் கடைகள் முளைத்துவிடும். ஆனல் உடலுக்கு நன்மை பயப்பவை இயற்கைப் பானங்களே. ஒரு இயற்கைப் பானத்திற்கு முன்னால் ஆயிரம் செயற்கைப் பானங்கள் நின்றாலும் பயனில்லை. அதுவும் பதநீர் போன்ற பானங்கள் வெயிலைத் தணிப்பதற்கு இயற்கை கொடுத்த கொடை. கடலூர் வெள்ளிக் கடற்கரைக்கு 500 மீட்டர்...

Read More
கோடை

வெப்பம் எனும் வில்லன்

குடைபிடித்து, செருப்புமணிந்த ஒரு பெண், கொழும்பின் பிரதான தெருவொன்றின் மீது நடந்து செல்கிறாள். அவளது கையில் ஒரு முட்டை. ஒளிப்படக் கருவியுடன் படப்பிடிப்புக் குழுவினர் பின்தொடர, முட்டையை நடு வீதியில் உடைத்து ஊற்றுகிறாள். சரியாக அறுபத்தி இரண்டு செக்கன்களில் முட்டை முற்றாகப் பொரிந்து வருகிறது...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 93

93. வேட்கை அசோகமித்திரனை வெளியீட்டு விழாவில் பார்த்ததோடு சரி. பார்த்து நாளாயிற்றே என்று சும்மா பார்க்கப்போனான். பச்சையப்பாஸில் படித்துக் கொண்டிருப்பதாய் பேர்பண்ணிக் கொண்டு பரீக்‌ஷாவில் தீவிரமாக இருந்த காலத்தில் எத்தனை முறை தாமோதர ரெட்டி தெருவில் இருந்த அசோகமித்திரன் வீட்டிற்குச் சென்றிருக்கிறோம்...

Read More
கோடை

வெயிலோடு விளையாடு: கோடைக் குறிப்புகள்

இம்முறை குளிர்காலம் வந்து போனதே தெரியவில்லை. ஃபிப்ரவரியிலிருந்தே வெய்யோன் வெளுத்து வாங்க ஆரம்பித்து விட்டான். இன்னும்சில நாட்களில் ‘10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டியது’ என ஐ.பி.எல். செஞ்சுரிக்கு இணையாக வானிலை அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கிவிடும். அதிகரித்து வரும் வெப்பநிலை மேல்...

Read More
இந்தியா

கர்நாடகத் தேர்தல் ரவுண்ட் அப்

ஸ்ரீ சித்த கங்கா மடம். கர்நாடகத்தின் தும்கூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இடம். பாறைகளாலும், குன்றுகளாலும் சூழப்பட்ட இராமலிங்க, சிவகங்கே மலைத் தொடர்கள். 15-ஆம் நூற்றாண்டிலிருந்து லிங்காயத்தவர்களின் மத போதனைகள் கற்பிக்கப்பட்டு வரும் ஆசிரமம். இங்கு தான் கர்நாடகாவின் ஆட்சி அரியணையைப் பற்றிய முக்கிய...

Read More
திறக்க முடியாத கோட்டை தொடரும்

திறக்க முடியாத கோட்டை – 24

24 – வாரிசு இல்லாத வல்லரசு 20-பிப்-2014. சுதந்திர சதுக்கம், கீவ், உக்ரைன். குறி தவறாமல் சுடும் ஸ்நைப்பர்கள் சதுக்கத்தைச் சுற்றி வளைத்தனர். முக்கியப் போராளிகள் ஐம்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சற்று நேரத்தில் எண்ணிக்கை இருமடங்கானது. ஆம்புலன்ஸ்களிலேயே பரலோகம் சென்றடைந்த ஆன்மாக்கள் ‘பரலோக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!