Home » புளித்துப் போகுமா அரசியல்?
பெண்கள்

புளித்துப் போகுமா அரசியல்?

புகழ் வெளிச்சம் வீசும் நடிகர்களுக்கு முதல்வர் நாற்காலி எப்போதும் தூரத்துப் பச்சை. முதலமைச்சர் பதவி என்ற ஒற்றை நோக்கைத் தவிர அரசியலுக்கு வந்து தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எந்த நடிகருக்கும் இருக்கிறதா தெரியவில்லை. வாய்ப்பை இழந்த நடிகர்கள் ஏதாவதொரு கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அரசியல் தூண்டில் போடுகிறார்கள். ஆனால் அரசியல்கட்சிகளுக்குத் தேவை நடிகர்களுடைய சினிமாக் கவர்ச்சிதானே தவிர சக அரசியல்வாதி அல்ல. கைதேர்ந்த அரசியல்வாதிகள் அவர்களை எங்கு வைக்க வேண்டுமோ அங்கேயே வைத்து விடுகிறார்கள். அவர்களால் கட்சிக்குக் கூட்டத்தைத் தவிர எந்தவிதப் பலனும் இல்லை என்பது தான் இன்றைய நிலை.

தமிழக அரசியலைப் பொறுத்த வரை எம்ஜிஆருக்கு இருந்த செல்வாக்கு அரசியல் ரீதியாக யாருக்கும் அமைந்ததும் இல்லை. மறைந்த விஜயகாந்த் இதில் சற்றே பரவாயில்லை. மற்றவர்கள் பெரிதாக ஜொலிக்கவில்லை. நடிகன், நடிகை இருவரின் நிலையும் தமிழ்நாட்டு அரசியலில் ஒன்றுதான்.

தமிழ் நடிகைகளில் முதலில் பிரச்சாரத்திற்கு சென்றவர்கள் யார் என்று பார்த்தால்  மாடி லட்சுமியும், ஜெய சாந்தியும் என்று தெரிய வந்தது. இவர்களைப் பற்றித் தேடியபோது மாடி லட்சுமி பழம்பெரும் நடிகை சச்சுவின் அக்கா என்று மட்டும் தெரிந்தது. மற்றவரைப் பற்றிய தகவல்களே தெரியவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!