Home » திறக்க முடியாத கோட்டை – 21
திறக்க முடியாத கோட்டை தொடரும்

திறக்க முடியாத கோட்டை – 21

21 – விசுவாசத்திற்குக் கிடைத்த பரிசு

சோவியத்தின் ஜனநாயகத்தைக் கருத்தாங்கி, ஈன்றார் அதிபர் கர்பச்சோவ். குறைப்பிரசவத்தில் பிறந்த ரஷ்யாவை இறந்துவிடாமல் பார்த்துக் கொண்டார் அதிபர் எல்ஸின். அதற்குமேல் சமாளிக்க முடியாத நிலை. ராணுவம், பொருளாதாரம், உற்பத்தி என ஒவ்வொன்றிலும் ரஷ்யா ஊனமடையத் தொடங்கியது. இப்போது யாரை மாற்றுவது? பிரதமர்களை மாற்றியும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. சரி, இம்முறை அதிபரை மாற்றிப் பார்ப்போம் என்று முடிவெடுத்தார் எல்ஸின். அப்போதையப் பிரதமராக இருந்த புதினின் கைகளில் நாட்டை ஒப்படைத்தார். எல்ஸினின் கடைசி, சரியான முடிவு.

அன்றிலிருந்து இருபது ஆண்டுகாலமாக ரஷ்யாவின் அதிபராகத் தொடர்கிறார் விளாதிமிர் புதின். இனியும் தொடர்வார், சந்தேகம் வேண்டாம். சட்டச் சிக்கல்களால் இடையில் நான்கு வருடம் டிமிட்ரி மெத்வதேவ் அதிபரானார் (2008-2012). அப்போதும் பிரதமராக இருந்து, ஆட்சியைக் கண்காணித்துக் கொண்டார் புதின். பிறகு சட்டத்திருத்தங்கள் கொண்டுவந்து, ஒருவரே நான்கு முறை அதிபராகத் தொடரலாமென்றார். நான்காவது முறையாக 2024-ஆம் ஆண்டும் அதிபராகப் போகிறார். இதன்பின் இந்த சட்டங்கள் தேவைப்படுமா என்பதும் சந்தேகம்தான். சீன அதிபரைப் போல வாழ்நாள் அதிபராக தன்னை நியமித்துக் கொள்ளும் வாய்ப்புகளே அதிகம். இத்தனைக் கால ரஷ்ய அரசியலில் இடம்பெற்றிராத புதின், எவ்வாறு கால் நூற்றாண்டு கால அதிபரானார்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!