Home » தமிழ்நாடு » Page 8

Tag - தமிழ்நாடு

தமிழ்நாடு

விடைபெற்ற இருவர்

சிவகங்கை மாவட்டத்தில் கனமழை பெய்த ஒரு நாள். 1997 ஆம் ஆண்டு. சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஒரு ரெய்டுக்காகச் சென்று கொண்டிருந்தார். ஜீப்பில் அவருடன் சக காவலர்களும் இருந்தார்கள். அப்போது தற்செயலாக வழியில் பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு விபத்தில் சிக்கிய பேருந்தைப் பார்த்தார்கள். பாலத்தில் இருந்து தொங்கிக்...

Read More
நம் குரல்

மதுக்கடைகள், ரசீதுகள் மற்றும் சில சிந்தனைகள்

உணவு, உடை, உறைவிடம் என்கிற மூன்று அடிப்படைகளில் சிக்கல் இல்லாத நிலை உண்டாகும்போது கேளிக்கை என்னும் நான்காவது அம்சத்தைத் தேடிச் செல்வதே மனித குலத்தின் இயல்பாக ஆதிகாலம் முதல் இருந்து வந்திருக்கிறது. போதை என்பதைக் கேளிக்கையின் ஓரங்கமாக நாம் கொள்ள இயலும். ஓர் அரசு இதனை மட்டுப்படுத்தலாம், தேட வைக்கலாம்...

Read More
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி: படம் வரைந்து பாகம் குறித்தல்

கடந்த வாரம் முழுதும் ஊடகங்களை ஆக்கிரமித்தவர், மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. துறையின் பெயர்தான் மதுவிலக்கே தவிர, டாஸ்மாக் நிர்வாகம்தான் அவருக்கு முக்கியப் பணி. டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுவது ஊரறிந்த உண்மை. அதைச் சுட்டி, அவரைப்...

Read More
தமிழ்நாடு

எரியும் மேல்பாதி

கேரள மாநிலம் வைக்கத்திலிருக்கும் மஹாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் கூடாதென்ற நடைமுறை பலகாலமாக இருந்தது. இதை எதிர்த்து 1924-ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி தொடங்கியது ஒரு போராட்டம். அதற்கு “வைக்கம் போராட்டம்” என்று பெயர். அஹிம்சை வழியில் நடந்த இந்தப் போராட்டம்...

Read More
தமிழ்நாடு

சாதி ஆணவங்களை வேரறுப்போம்!

2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தற்கொலைக் குறிப்பும் அவரது அலைபேசியும் உடன் கைப்பற்றப்பட்டன. தமிழ்நாட்டை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கின் ஆரம்பம் இதுதான். 2015, ஜூன் 23-ஆம் தேதி கோகுல்ராஜும்...

Read More
தமிழ்நாடு

சிங்கப்பூரில் ஸ்டாலின்: சாதித்தது என்ன?

இந்த மே மாதம் 24 மற்றும் 25’ஆம் நாட்கள் அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வரும் அவரது அமைச்சரவை, அதிகாரிகள் குழுவினர் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு வந்திருந்தார்கள். நோக்கம் முதலீட்டாளர்களை ஈர்ப்பது. முதல்வரின் பயணத்திட்டம் சிங்கப்பூருக்கானது மட்டுமல்ல, ஒன்பது நாட்களுக்கு, சிங்கப்பூர் மற்றும்...

Read More
தமிழ்நாடு

அமைச்சரவை மாற்றம்: இடமாறு தோற்றப் பிழை

முதலமைச்சர் ஸ்டாலின் ‘நிர்வாகக் காரணங்களுக்காக’ச் செய்த அமைச்சரவை மாறுதல்களின் உண்மையான காரணங்கள் பற்றிய விவாதங்கள் கடந்த வாரத்தின் ஹைலைட். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. முதல் முறை எம்எல்ஏ ஆனதும் கிடைத்த அமைச்சர் பதவியால் மகிழ்ச்சியில் இருந்தவர் நிர்வாகத்தில் கோட்டை...

Read More
தமிழ்நாடு

அரசியலும் ஆழப் போலிகளும்

தமிழ்நாடு மாநில பிஜேபி தலைவர் அண்ணாமலை ஒரு ஆடியோ துணுக்கைக் கடந்த வாரம் வெளியிட்டார். எப்போது பேசப்பட்டது, யாரிடம் பேசப்பட்டது போன்ற எந்தத் தகவல்களும் இல்லை. சரியாகப் புரியாத அந்த ஆடியோவுக்கு அவர்களே ஆங்கில சப்-டைட்டிலும் போட்டிருந்தார்கள். தமிழ்நாடு முதல்வரின் மகன் உதயநிதியும், மருமகன் சபரீசனும்...

Read More
தமிழ்நாடு

கூடிக் குலாவும் காலம்

கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி டெல்லியில் நடந்த அதிமுக-பாஜக தலைவர்கள் சந்திப்புக்குப் பிறகு கூட்டணி தொடரும் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர் இரு தரப்பினரும். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வான பிறகு சேலத்து மாம்பழங்களோடு டெல்லிக்குப் பயணம் செய்து அமித்ஷா மற்றும் நட்டாவை சந்தித்தார்...

Read More
தமிழ்நாடு

உரிமைத் தொகை: உள்ளும் புறமும்

செப்டம்பர் 2023-லிருந்து தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப் போவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சில குடும்பத் தலைவிகளை தகுதியற்றவர்கள் என அரசு சொல்வதாக வார்த்தைகளைத் திரித்து மீம்கள் பரவத் தொடங்கி விட்டன. “மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வைச் சிறிதேனும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!