Home » அமைச்சரவை மாற்றம்: இடமாறு தோற்றப் பிழை
தமிழ்நாடு

அமைச்சரவை மாற்றம்: இடமாறு தோற்றப் பிழை

முதலமைச்சர் ஸ்டாலின் ‘நிர்வாகக் காரணங்களுக்காக’ச் செய்த அமைச்சரவை மாறுதல்களின் உண்மையான காரணங்கள் பற்றிய விவாதங்கள் கடந்த வாரத்தின் ஹைலைட். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. முதல் முறை எம்எல்ஏ ஆனதும் கிடைத்த அமைச்சர் பதவியால் மகிழ்ச்சியில் இருந்தவர் நிர்வாகத்தில் கோட்டை விட்டதாகச் சொல்கிறார்கள்.

பதவியேற்ற புதிதில் விதவிதமான இனிப்பு ஐட்டங்களை அறிமுகப்படுத்தினார். ஆனாலும் ஆவின் லாபத்தில் இயங்கவில்லை. பால் கொள்முதலில் கவனம் செலுத்தாததால் அனைவரும் தனியாருக்குக் கொடுத்து விடுகிறார்கள். வெளிமாநில பால் பவுடரை வாங்கி பற்றாக்குறையைச் சமாளிக்கும் நிலை. இதோடு, நாற்காலி வரத் தாமதமானதால் கல்லைக் கொண்டு அடித்தது, மைக் தட்டி விட்டவரின் முதுகில் தட்டியது என வைரல் வீடியோக்களுக்கு கன்டென்ட் ஆனதும் காரணம் என்கிறார்கள். இவர் மகன் அசீம்ராஜா டெண்டர் விஷயங்களில் தலையிட்டதும் காரணமாகச் சொல்லப்படுகிறது. இவர் பிப்ரவரியில் ஆவடி மாநகர திமுக செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மகனின் நடவடிக்கைகள் தந்தையின் பதவிக்கு உலை வைத்ததாகவும் பேச்சு உண்டு. இவற்றில் எது உண்மையோ இல்லையோ, பால்விலை உயர்வு அரசின்மீது அதிருப்தி ஏற்படுத்தியதை மறுக்க முடியாது. ஆவின் பால் பாக்கெட்டுகள் அவ்வப்போது காலையில் தாமதமாக வந்ததற்கு ஒவ்வொரு வீட்டிலும் சாட்சி இருப்பதையும் நிராகரிக்க முடியாது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • good one. but ptr should exercise intelligence in a constructive way that too in a purely political set up with DMK where nothing but power matters

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!