“ம்மா.. என்னால சத்தியமா முடியாது.. விட்டுட்டு மட்டும் போகாத please” அறையெங்கும் கண்ணீர் வெடித்துத் தெறிக்கக் கதறிக் கொண்டே சாஷ்டாங்கமாக மனைவி காலில் விழுந்தான் ஹரி. “நான் முடிவு பண்ணியாச்சு ஹரி. இனிமே யோசிக்க எதுவும் இல்ல. தயவுசெஞ்சு விட்டுடு.” “இந்தச் சின்னக் குழந்தைகளை வச்சுக்கிட்டு நான் என்ன...
Tag - காதல்
ஃபோனைக் கட் பண்ணும்போது மறுமுனையில் சஹானா சத்தமாகச் சொல்வது காதில் விழுகிறது. டின்னருக்குக் கொய்யாப்பழம்தான் என்று முடிவானதன் பின்னர், சின்னதாக ஒரு பழம் சாப்பிட்டால் போதுமா. காலையாகும் வரை பசி என்ற சொல்லே தலை தூக்காத வண்ணம் வயிறு நிறையக் கொய்யாவை நிரப்ப வேண்டும். சஹானாவின் இந்த வகையான கொள்கைகள்...
மழை வலுத்திருந்தது. மின் நிலையத்தில் போதிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டுக் கிளம்புவதற்குள் நன்கு இருட்டியிருந்தது. ஒரு சுற்று மேலணைக்குச் சென்று பார்வையிட்ட பிறகு வீட்டிற்குச் செல்லலாமா என்று யோசித்தேன். “இந்தக் கனமழை இரவில், காட்டுச்சாலையில் பயணம் போகும் அந்த சந்தோஷத்தை ஏன் இழக்கிறாய்” என்றது மனது...
தடதடவென ஸ்ட்ரெச்சர் அறைக்குள் நுழைந்தது. மதுமிதா மயக்கத்திலிருந்து மீள முயற்சித்துக் கொண்டிருந்தாள். கைகளில் உதறல் இன்னும் நிற்கவில்லை. ஆறு மணிநேரப் போராட்டத்தின் பயம். ஒருவழியாய் அறுவைசிகிச்சை செய்து பிள்ளையை வெளிக்கொணர்ந்து விட்டார்கள். உதறும் வலக்கையை தனது இரு உள்ளங்கைகளால் மூடியவாறு...
96 போன்ற திரைப்படங்களைப் பார்த்து ரசிக்கிறோம். உண்மையில், பள்ளி மாணவர்களுக்கு வருகிற காதல், அவர்களது எதிர்காலத்தைக் கபளீகரம் செய்துவிடும் அபாயம் அதிகம். நமது இலங்கைச் செய்தியாளர் ரும்மான் ஒரு பள்ளி ஆசிரியை. அதுவல்ல சிறப்பு. மாணவர்களின் காதலை வலிக்காமல் சஸ்பெண்ட் செய்து வைக்கும் கலையில் அவர் வல்லவர்...
இம்மாதத் தொடக்கத்தில் கொரோனாவை விட அதிதீவிரமான ஒரு வைரஸை சீனாவில் உற்பத்தி செய்திருக்கிறார்கள். அந்த வைரஸைக் கண்டு மேலை நாட்டு மக்களுக்கு எந்த பயமும் இல்லை. சீனர்கள் பாம்பைத் தலை முதல் வால் வரை பார்ட் பார்ட்டாகச் சமைத்துச் சாப்பிடுவது போல அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் இந்த வைரஸை வைத்து விதவிதமான...
இலங்கையின் இளம் தலைமுறை பாஸ்போர்ட் ஆபீஸ்களின் வாசல்களில் நிற்கிறது. அல்லது விமானநிலைய டிபார்ச்சர் வரிசையில் பாஸ்போர்ட்டை ஏந்திக் கொண்டு நிற்கிறது. நிச்சயமற்ற எதிர்காலம், புரியாத அரசியல் குழப்பங்கள், என்றைக்குமே தீராத இனமுரண்பாடுகளுடன் மல்லுக்கட்டி எப்படியோ பிழைக்க முயன்றால் புதிதாய் விதித்து...
காதல் உன்மத்தம் கொள்ள வைக்கும் என்பார்கள். உற்சாகம், சுறுசுறுப்பு, மயக்கம், பரபரப்பு, பசியின்மை, தூக்கமின்மை என்று பலவித உணர்வுகளைக் கொடுக்கிறது காதல். ஆனால், காதல் உணர்வு அல்ல; பசி தாகம் போன்று உடலியல் உந்துதல் என்கிறார்கள் உயிரியலாளர்கள். சிக்கலான உணர்ச்சி என வரையறை செய்கிறார்கள் உளவியலாளர்கள்...
காதல் – எத்தனை இனிமை ததும்பும் ஒரு சொல்! எவ்வளவு இன்ப மயமான ஒரு செயல்! காதலின் ஆதார குணம் பரஸ்பரத் தன்மை. ஆனால் காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரி அனுபவத்தை அளிக்கிறதா? ஆணின் காதலும் பெண்ணின் காதலும் ஒன்று போலவேதான் நமது சமூகத்தால் அணுகப்படுகிறதா? காதலில் இருக்கிறதா சமத்துவம்? வரலாறு...
இந்த வருடம் எப்படிக் கழிந்தது? இரண்டு வருட தொற்றுக்கால வீடடங்கல் முடிந்து கல்லூரிக்குச் சென்ற தலைமுறையினர் சிலரிடம் கேட்டோம்: வர்ஷா சரஸ்வதி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். இந்த ஆண்டுத் துவக்கத்தில் எந்தவிதத் தீர்மானமும்...