Home » அர்ச்சனைப் பூக்கள்
காதல்

அர்ச்சனைப் பூக்கள்

தடதடவென ஸ்ட்ரெச்சர் அறைக்குள் நுழைந்தது. மதுமிதா மயக்கத்திலிருந்து மீள முயற்சித்துக் கொண்டிருந்தாள். கைகளில் உதறல் இன்னும் நிற்கவில்லை. ஆறு மணிநேரப் போராட்டத்தின் பயம். ஒருவழியாய் அறுவைசிகிச்சை செய்து பிள்ளையை வெளிக்கொணர்ந்து விட்டார்கள். உதறும் வலக்கையை தனது இரு உள்ளங்கைகளால் மூடியவாறு, முத்தமிட்டான் மனோ. “இப்போ வந்துருவா நம்மப் பூக்குட்டி”, என்று அவளைத் தயார்படுத்தினான். அவனது ஸ்பரிசத்தில் களைப்பாறினாள் மது. மெல்லக் கண் திறந்தாள். முதல்முறை மனோவைப் பார்த்தது நினைவிலோடியது.

வடபழனி முருகருக்குத் திருக்கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. மதுவும் மனோவும் தேர் வரும் பாதையிலிருந்து சற்று விலகி நின்றார்கள். “கோயிலுக்கெல்லாம் வர்ற பழக்கம் இருக்கோ?”, என்று எகத்தாளமாய் ஆரம்பித்தான் மனோ. சம்பிரதாயத்திற்காவது அவள் வருவேன் என்று சொல்வாள். தனக்கு இதிலெல்லாம் உடன்பாடில்லை, விரைவில் நாத்திகனாகப் போகிறேன் என்று பதிலைத் தயார்படுத்தி வைத்திருந்தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!