இம்மாதத் தொடக்கத்தில் கொரோனாவை விட அதிதீவிரமான ஒரு வைரஸை சீனாவில் உற்பத்தி செய்திருக்கிறார்கள். அந்த வைரஸைக் கண்டு மேலை நாட்டு மக்களுக்கு எந்த பயமும் இல்லை. சீனர்கள் பாம்பைத் தலை முதல் வால் வரை பார்ட் பார்ட்டாகச் சமைத்துச் சாப்பிடுவது போல அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் இந்த வைரஸை வைத்து விதவிதமான பர்கர்கள் செய்து அப்படியே முழுங்கிப் பழகியவர்கள். இது இந்தியாவைத் தாக்குவதற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட வைரஸ். அதிலும் குறிப்பாக இந்தியப் பெற்றோர்களை மட்டும் தாக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட ஸ்பெஷல் வைரஸ். ‘காதல் வைரஸ்’.
இதைப் படித்தீர்களா?
10. சொல்மாறாட்டம் நான் செய்வது தருமமில்லை என்பது நன்றாகத் தெரியும். இப்பாவச் செயலுக்காக நான் ஏந்திச் சுமக்கவேண்டிய கொடுந்துயரம் எதுவென்றும் அறிவேன்...
10. சிறிய வேலையும் பெரிய வேலைதான் கோகலே தென்னாப்பிரிக்காவுக்கு வருகிறார் என்கிற செய்தி அங்குள்ள இந்தியர்களுக்கெல்லாம் மிகப் பெரும் மகிழ்வளித்தது...
சுழலும் கேமரா!பாட்டி! பலே!
விஸ்வநாதன்
வைரஸ் பற்றிய நகைச்சுவைக் கட்டுரை என்று நினைத்தேன். பார்த்தால் காதல் வைரஸ்!
இந்தியாவில் குடியுரிமை பெற்று அது நிரந்தரமாகத் தங்குவதற்கு முன் தடுக்க வேண்டிய அவசியத்தைக் குறித்துப் பேசியிருக்கிறது. சுழலும் கேமராவாக இருந்த பாட்டிகள் இப்போது இல்லை. அதனால் பிள்ளைகளைக் கண்காணிக்க மொபைல் வாங்கித் தருகின்றனர் பெற்றோர். அதைப் பார்க்க குனிந்த தலையை, எதிரில் பேரழகியோ/கனோ வந்தாலும் நிமிர்த்த மாட்டார்கள் என்கிற நம்பிக்கையில்.
இப்படிப் போற்றிப் பாதுகாத்து வளர்க்கப்படும் பிள்ளைகளைக் கலைக்க , சீனா சதித் திட்டம் தீட்டியிருப்பதைப் புரிய வைத்த சிவசங்கரி அவர்களுக்கு நன்றி