Home » உலகம் » Page 31

Tag - உலகம்

உலகம்

ஊரெல்லாம் தண்ணீர், திசையெல்லாம் சேதம்

செப்டம்பர் 10 ஞாயிறு இரவு. லிபியாவின் கடற்கரை நகரமான டெர்னாவில் ஒரே மழை. ‘டேனியல்’ புயல் மையம் கொண்டிருந்ததால் 9-ஆம் தேதியிலிருந்தே மழை கொட்டிக் கொண்டிருந்தது. பாதி வருடத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவு ஒரே நாளில் பெய்தது. மக்கள் அச்சத்திலிருந்தனர். வெள்ளம் வருமோ..? அணைகளைப் பற்றிப் பல காலமாக...

Read More
உலகம்

ஓட்டும் உரிமையுடன் ஓட்டுரிமை

அமெரிக்காவில் 18 வயது நிரம்பியவுடன் அனைவரும் உடனே செய்யும் முதல் வேலை, கார் ஓட்டுநருக்கான முழுச் சலுகைகளுடன் கூடிய உரிமத்தைப் பெறுவதே. அப்போதே வாக்காளராகவும் பதிவு செய்துகொள்ள முடியும். விருப்பப்பட்டால் எந்தக் கட்சியை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்பதையும்கூடப் பதிவு செய்து கொள்ளலாம். ஓட்டுநர் உரிமம்...

Read More
உலகம்

ஒரு துப்பாக்கி எடுத்தவன் கதை

இப்படியொரு நிலைமை தனக்கு உண்டாகும் என்று சலாஹுதீன் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆயுதமேந்தியவர். ஆள் பேரைச் சொன்னால் அண்டை அயலில் அத்தனை பேரும் அலறுவார்கள். காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் நடத்திய அத்தனைத் தாக்குதல்களுக்கும் பின்னால் மூளையாக நின்று செயல்பட்ட, அந்த அமைப்பின் நிகரற்ற தலைவர். உலகறிந்த...

Read More
உலகம்

பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டி

தேசியகீதம் முழங்க, ரஷ்யாவின் மூவர்ணக்கொடி கம்பத்தில் தவழ்ந்தேறியது. வலதுகைச் சட்டையில் ஜீ முத்திரையோடு வரிசையில் சிறுவர் சிறுமியர். தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். எவரது உதடும் அசையவில்லை. ஒரு சிறுமி தன் இருகாதுகளையும் பொத்திக் கொள்கிறாள். அவமானத்தால் கேமரா வேறுதிசை...

Read More
உலகம்

மக்கள் காசில் தேர்தல் செலவு: இது அமெரிக்க ஸ்டைல்!

அமெரிக்கத் தேர்தலைத் தொடர்கிறவர்களின் கவனத்தைக் கட்டியிழுப்பது, கொள்கைகளுக்கான விவாதங்கள் மட்டும் அல்ல. கட்சியின் அரசியல் செயற்மட்டக் குழுக்களும், அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களும் எவ்வளவு நிதி நன்கொடையாக வசூலித்தார்கள், யார் யார் எவ்வளவு நன்கொடை கொடுத்தார்கள் என்பதுவும் கூடத்தான். கடந்த 2020-இல்...

Read More
உலகம்

நடுங்க வைக்கும் நாசகாரக் கூட்டணி

‘உலகமே உன்னை எதிர்த்தாலும், துணிந்து நில்’ என்பார்கள். இத்தகைய துணிச்சலுடையவர் கிம் ஜோங்-உன், வடகொரிய அதிபர். இவருக்குச் சற்றும் சளைக்காதவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். வடகொரியா உருவாக உறுதுணையாக இருந்தது அன்றைய சோவியத். அதற்கான நன்றிக்கடனைச் செலுத்தும் சந்தர்ப்பம் இப்போது அமைந்துள்ளது வட...

Read More
உலகம்

வெடித்தது அரசியல் குண்டு

முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவைப் பதவிக்குக் கொண்டு வருவதற்காகவே 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகைத் தினத்தில் கிறிஸ்தவத் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து இருநூற்று எழுபது அப்பாவி உயிர்களைப் பலியெடுத்த படுமிலேச்சத்தனமான குண்டு வெடிப்புக்கள்...

Read More
உலகம்

மொராக்கோ: புரட்டியெடுத்த பூகம்பம்

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.10. வாரத்தின் சிறந்த நாளாக முஸ்லிம் மக்கள் நினைக்கும் நாள் வெள்ளி. வாடிக்கையாகச் செய்யும் தொழுகையுடன் சேர்த்து, சிறப்புத் தொழுகைகளும் அன்று இருக்கும். மொராக்கோவின் மெரகேஷ் நகரத்தில் உள்ள பழம்பெரும் மதினாவாவிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. உறங்கும் முன்...

Read More
உலகம்

குரூரத்தின் முகம்

இளைஞர்களைக் கவரக் கூடிய பிரசார வீடியோக்களை உருவாக்குவதில் பிரபலமான தீவிரவாத இயக்கம் ஒன்று. அவ்வீடியோக்களில் வருபவர்களின் முகம் அடையாளம் தெரியாதளவு முகமூடிகள் அணிந்து கொள்வதும் பொதுவான செயல்முறை. அப்படியான ஒரு இயக்கம் அவர்களுக்குத் தெரியாமலே அவர்களைப் பதிவு செய்து கொண்டது. அத்தகைய வீடியோவினை...

Read More
உலகம்

பறந்து பறந்து படிப்போம்!

ஆப்கனிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்தது முதல் இப்பொழுதுவரை எதையும் உருப்படியாகச் செய்யவில்லை. முடிந்தவரை பெண்களுக்கு எதிராகச் சாத்தியமுள்ள அனைத்து தடைகளையும் நெருக்கடிகளையும் உருவாக்கிவிட்டார்கள். இந்த நாட்டில் பெண்ணாகப் பிறந்தது பாவம் என்பதுவரை மக்கள் நினைத்து வருந்திவிட்டார்கள். இனி புதிதாகச்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!