Home » வெடித்தது அரசியல் குண்டு
உலகம்

வெடித்தது அரசியல் குண்டு

ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவக் காட்சிகளுள் ஒன்று (பழைய படம்)

முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவைப் பதவிக்குக் கொண்டு வருவதற்காகவே 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகைத் தினத்தில் கிறிஸ்தவத் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து இருநூற்று எழுபது அப்பாவி உயிர்களைப் பலியெடுத்த படுமிலேச்சத்தனமான குண்டு வெடிப்புக்கள் நடத்தப்பட்டதாக ஹன்ஸிர் அஸாத் மெளலானா என்பவர் பிரித்தானியாவின் சானல் 4 தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கப் போக விவகாரம் பெரும் அரசியல் சர்ச்சையைத் தோற்றுவித்து இருக்கிறது.

சானல் 4, ஸ்விட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி இருக்கும் அஸாத் மெளலானாவின் வீடியோவை ஒளிபரப்பப் போவதாக அறிவித்ததுமே பெரும் பரபரப்பு நிலவியது. சரியாய் செப்டம்பர் 5ம் தேதி இலங்கை நேரம் அதிகாலை மூன்றரை மணிக்கு நாற்பத்தேழு நிமிட திகில் அப்பிய வீடியோவை வெளியிட்டது சானல் 4. குறித்த நிகழ்ச்சியில் மெளலானாவுடன், இலங்கையில் போலிஸ் துறையில் கடமையாற்றிவிட்டு உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாடைவிட்டு வெளியேறியதாகச் சொல்லப்படும் இரண்டு உயரதிகாரிகளும் சாட்சியமளித்தனர். இவர்களுக்குப் பக்கபலமாகவும், பலமான ஆதாரமாகவும் அமைந்தன கோட்டாபய ராஜபக்சே பாதுகாப்புச் செயலாளராய் இருந்த போது அவரது கர்ஜனைகளைக்குப் பயந்து புலம்பெயர்ந்த இலங்கையின் முன்னாள் முன்னணி ஊடகவியலாளர்களின் சாட்சியங்களும்..

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!