Home » பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டி
உலகம்

பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டி

தேசியகீதம் முழங்க, ரஷ்யாவின் மூவர்ணக்கொடி கம்பத்தில் தவழ்ந்தேறியது. வலதுகைச் சட்டையில் ஜீ முத்திரையோடு வரிசையில் சிறுவர் சிறுமியர். தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். எவரது உதடும் அசையவில்லை. ஒரு சிறுமி தன் இருகாதுகளையும் பொத்திக் கொள்கிறாள். அவமானத்தால் கேமரா வேறுதிசை திரும்புகிறது.

ரஷ்யா ஆக்கிரமித்திருந்த கெர்சோன் பகுதியின் நிகழ்வு இது. உக்ரைனியச் சிறார்களுக்கு ரஷ்ய தேசப்பற்றை ஊட்டித்திணிக்கும் முயற்சி. கெர்சோனை மீட்டெடுக்க முடிந்த உக்ரைனால், அந்நிலத்தின் குழந்தைகளை இன்னும் வீடு சேர்க்க முடியவில்லை.

கொரோனாவால் முடங்கிப்போனது உலகம். அதைத் தொடர்ந்த, போரில் தொலைந்தது குழந்தைகளின் உலகம். பள்ளி, நண்பர்கள், விளையாட்டு என அனைத்தும் கனவாயின. சுவர்களும், கைபேசியும் மட்டுமே கண்களை நிறைத்தன. ஆட்சி மாறியபின், காட்சிகளும் மாறின. ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இலவச முகாம்கள் திறந்தன. வீட்டிற்குள் அடைந்திருந்த குழந்தைகளை இவை ஈர்த்தன. இரண்டு வார முகாமென்று அனுப்பிய பெற்றோர்கள், மாதக் கணக்கில் அவர்களைத் தேடி வருகின்றனர். உக்ரைன் நிலங்களுடன் சேர்த்து குழந்தைகளும் ரஷ்யாவால் உடைமையாக்கப்பட்டனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!