Home » பறந்து பறந்து படிப்போம்!
உலகம்

பறந்து பறந்து படிப்போம்!

அல் ஹப்தூர்-ஆப்கன் மாணவிகள்

ஆப்கனிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்தது முதல் இப்பொழுதுவரை எதையும் உருப்படியாகச் செய்யவில்லை. முடிந்தவரை பெண்களுக்கு எதிராகச் சாத்தியமுள்ள அனைத்து தடைகளையும் நெருக்கடிகளையும் உருவாக்கிவிட்டார்கள். இந்த நாட்டில் பெண்ணாகப் பிறந்தது பாவம் என்பதுவரை மக்கள் நினைத்து வருந்திவிட்டார்கள். இனி புதிதாகச் செய்ய அங்கே ஒன்றுமில்லை. அப்படி ஏதாவது மிச்சம் மீதி இருக்குமானால், ஷரிஅத்தின் பேரில் பாரத்தை ஏற்றிவிட்டு நாளைக்கே அறிவித்துவிடுவார்கள். முழு மூடர்கள் ஆளும் நாட்டில் நவீன காலம் என்பதும் கற்காலமே.

வந்த புதிதில் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் என்பது போல என்னவோ சில சொற்கள் சொல்லப்பட்டன. யாரும் நம்பினாற்போலத் தெரியவில்லை. சரி எங்கள் வழக்கப்படி இருந்துகொள்கிறோம் என்று ஆரம்பித்துவிட்டார்கள். பள்ளிகள், கல்லூரிகள் எல்லாம் பெண்களுக்கு இழுத்து மூடப்பட்டன. வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலையும் அதுவே. வீட்டை விட்டுப் போக வேண்டுமா? ஆண் துணை வேண்டும். ஆண் துணை இல்லையென்றால் செத்து மடி. அவ்வளவே ஆட்சியின் கருணை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!