Home » அமெரிக்கா » Page 10

Tag - அமெரிக்கா

உலகம்

மோடியின் அமெரிக்கப் பயணம் சாதித்தது என்ன?

இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடனின் சந்திப்பு பல எதிர்ப்புக் குரல்களுக்கு இடையே ஒருவாறாக நடந்து முடிந்தது. அமெரிக்காவிற்கு, அமெரிக்க அதிபர்களுடைய அழைப்பை ஏற்றுப் பல பாரதப் பிரதமர்கள் இதற்குமுன் வந்து காங்கிரசில் பேசிவிட்டு, வெள்ளை மாளிகையில் விருந்துண்டு சென்றிருக்கிறார்கள். அதிபர்...

Read More
உலகம்

நிற்க நிழல் வேண்டும் – 1

காலையில் அமைதியாய்ப் பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள் திலிப்போன்சா. திடீரென அம்மாவின் ‘திலிப்போன்சா திலிப்போன்சா’ என்ற பதற்றமான குரலும் அவளை நிலத்தில் தள்ளிய கையும் புரியாமல் பாம்பு போல ஊர்ந்து அடுத்த அறைக்குள் அவளும் அம்மாவும் சென்று, அவளின் தம்பியைத் தூக்கிக்கொண்டு, புத்தகப்பையில் சில...

Read More
உலகம்

சாத்தான் நுழைந்த வீட்டில் டிராகன் நுழையலாமா?

கடந்த வாரம் பலஸ்தீன் அதிபர் அல்லது அத்தாரிட்டியின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் சீனாவுக்கு விஜயம் செய்த போது, தம் சரித்திரத்தைவிடப் பழைமையான ஒரு உலகப் பிரச்னையில் மத்தியஸ்தம் வகிக்க விரும்புவதாக அறிவித்திருந்தது சீனா. ஆம். இஸ்ரேல் – பலஸ்தீன் தகராறில் சமாதான சகவாழ்வு விரும்பி என்ற குல்லாவைச் சீனா...

Read More
உலகம்

அமெரிக்கா-சவூதி அரேபியா: பிரிவோம், சந்திப்போம்!

அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸில் வசிக்கிறார் ஜாக் டீக்சீரா. அவர் மாசசூசெட்ஸ் நேஷனல் கார்ட், (Massachusetts Air National Guard, ) என்ற உள்ளூர் பாதுகாப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருபத்தொரு வயதான ஜாக் Discord (டிஸ்கார்ட்)என்ற செயலியில் தீவிர வீடியோ கேமர். கடந்த ஏப்ரல் மாதம் வரை அவர்...

Read More
உலகம்

ஊருக்கும் வெட்கமில்லை, யாருக்கும் வெட்கமில்லை!

தேன்கூட்டைக் கலைத்தாற்போல முன்னாள் அதிபர் டிரம்ப்பின் மீது பல வழக்குகள் பதிவாகும் என்பது தெரிந்தாலும், அவர் சட்டப்படி ஆதாரப்பூர்வமாகக் குற்றம் (indicted) சாட்டப்படுவார் என்பதை அவ்வளவு நிச்சயமாக யாரும் அறிந்திருக்கவில்லை. அதிபர் ஒபாமா பதவிக்காலத்தில் இருந்த நெறிமுறைகள் துறைக்கு ஓய்வு கொடுத்து...

Read More
ஆளுமை

தாமஸ் கிஸிம்பா: மறக்கக் கூடாத மனிதர்

நாஜி ஜெர்மனியர்களால் யூதர்கள் துரத்தித் துரத்தி சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட போது போலந்தில் இருந்த தன் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான யூதர்களைக் காத்தருளிய ஒஸ்கார் சிண்ட்லர் போல, ருவாண்டாவில் நடந்த இனப் படுகொலைகளின் போது நானூறுக்கும் மேற்பட்ட டுட்ஸி இனச் சிறுவர்களுக்குத் தன் அநாதை இல்லத்தில் அடைக்கலம்...

Read More
உலகம்

சிக்கல் சிங்காரவேலர்களின் கதை

பழைய குருடி கதவைத் திறக்க ஆரம்பித்திருக்கிறாள் என்று சில வாரங்களுக்கு முன்னர் ஆப்கன் விவகாரம் மீண்டும் சிக்கலாகிக்கொண்டிருப்பது குறித்து இங்கே எழுதியிருந்தோம். சங்கதி இன்றைக்கு சந்திக்கு வந்திருக்கிறது. ரகசிய ஆலோசனை என்று முத்திரையிடப்பட்டாலும் இதில் ஒரு புண்ணாக்கு ரகசியமும் இல்லை. மே பன்னிரண்டாம்...

Read More
ஆளுமை

அஜய் பங்கா: புதிய மீட்பர்?

இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் கல்வி கற்று அமெரிக்காவில் குடியேறிய அஜய் பங்கா, வெள்ளிக்கிழமை, ஜூன் 2, 2023 உலக வங்கியின் 14வது தலைவரானார். எந்த நாடு, என்ன மதம், ஆள் யார், எப்படி என்றெல்லாம் பார்க்காமல், தகுதியும் திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் அமெரிக்காவில் எவ்வளவு வேண்டுமானாலும் உயர...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

தெரிந்த எதிரியும் தெரியாத எதிரிகளும்

அமெரிக்காவின் மிஸ்ஸிசிபி மாகாணத்தில் எட்டு வயதுக் குழந்தையொன்று தனியறையில் விளையாடிக் கொண்டிருக்கிறது. வீடு முழுவதும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. குழந்தை அறை உட்பட. திடீரென கேமராவில் ஹாய் என்று ஒரு குரல் கேட்கிறது. பீதி அடைந்த குழந்தை நீ யார் என்கிறது. பயத்தில் கத்தி அம்மாவைக்...

Read More
உலகம்

மக்களே, கடன் கொடுங்கள்!

‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச் சில நகைச்சுவைத் துணுக்குகளை நீங்கள் படித்திருக்கக் கூடும். கடந்தசில வாரங்களாக அமெரிக்க அரசு தனது கடன் உச்சவரம்பை உயர்த்தப் பேச்சு வார்த்தை நடத்திக்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!