Home » அமெரிக்கா-சவூதி அரேபியா: பிரிவோம், சந்திப்போம்!
உலகம்

அமெரிக்கா-சவூதி அரேபியா: பிரிவோம், சந்திப்போம்!

ஜோ பைடன் - இளவரசர் சல்மான்

அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸில் வசிக்கிறார் ஜாக் டீக்சீரா. அவர் மாசசூசெட்ஸ் நேஷனல் கார்ட், (Massachusetts Air National Guard, ) என்ற உள்ளூர் பாதுகாப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருபத்தொரு வயதான ஜாக் Discord (டிஸ்கார்ட்)என்ற செயலியில் தீவிர வீடியோ கேமர்.

கடந்த ஏப்ரல் மாதம் வரை அவர் வீடியோ கேம்ஸ் உலகத்தில் ‘ஓஜே’(OJ) என்ற பட்டப் பெயருடன் ஜம்மென்று உலவிக் கொண்டிருந்தார். இணையத்தில் மக்களை ஈர்க்கும் விதமாக அவ்வப்போது சில சுவாரசியமான விஷயங்களையும் செய்வது அவரது வழக்கம். விளையாட்டாக அவர் செய்த ஒரு விஷயம் இன்று வெள்ளை மாளிகையையே கலவரத்தில் தள்ளியிருக்கிறது.

அவர் செய்தது இதுதான். அமெரிக்க-சவூதி அரேபியா உறவில் ஒயிட் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் குளிர்காயும் விதமான காரியம் அது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு முக்கியமான ஆவணத்தை (Classified Document) எங்கிருந்தோ அபேஸ் செய்தவர், அதை இணையத்தில் வெளியிட்டுவிட்டார். எக்காலத்திலும் வெளியே வர வாய்ப்பே இல்லாத ஓர் ஆவணம் உலகுக்கே பொதுவாக வெளியிடப்பட்டுவிட்டதில் வெள்ளை மாளிகை வெலவெலத்துப் போனது. பிரச்னைக்கு சவூதிதான் காரணமாக இருக்க முடியும் என்பது அவர்கள் தரப்பு. ஏற்கெனவே அமெரிக்க-சவூதி அரேபிய உறவு நாளுக்கு நாள் நைந்து வரும் சூழ்நிலையில் இந்தச் சம்பவம் சம்பந்தப்பட்ட இரு தரப்பு மேலிடங்களுக்கும் மேலும் கவலையளித்திருக்கிறது. அவையெல்லாம் ஒரு புறம் இருக்க, பிரச்னைக்குக் காரணமான பிரகஸ்பதியை அமெரிக்க உளவுத் துறை FBI கைது செய்து விசாரிக்க ஆரம்பித்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!