Home » தெரிந்த எதிரியும் தெரியாத எதிரிகளும்
அறிவியல்-தொழில்நுட்பம்

தெரிந்த எதிரியும் தெரியாத எதிரிகளும்

அமெரிக்காவின் மிஸ்ஸிசிபி மாகாணத்தில் எட்டு வயதுக் குழந்தையொன்று தனியறையில் விளையாடிக் கொண்டிருக்கிறது. வீடு முழுவதும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. குழந்தை அறை உட்பட. திடீரென கேமராவில் ஹாய் என்று ஒரு குரல் கேட்கிறது. பீதி அடைந்த குழந்தை நீ யார் என்கிறது. பயத்தில் கத்தி அம்மாவைக் கூப்பிடுகிறது. நான் உன் நண்பன். கிறிஸ்துமஸ் தாத்தா என்று நீண்டது குரல். பொருட்களை எல்லாம் கலைத்துப் போடு, டி.வியை உடை என்று குழந்தைக்குக் கட்டளைகள் வருகின்றன. இது ஒரு சம்பவம்.

அமெரிக்காவிலேயே வேறு ஒரு வீட்டில் அமேசானின் வீட்டு அழைப்பு மணியிலிருந்து எச்சரிக்கை சைரன் திடீரென ஒலிக்கிறது. திடுக்கிட்டு அந்த வீட்டில் இருந்த தம்பதியினர் எழும்பொழுது வீட்டின் கேமரா வழி ஒரு நபர் பேசுகிறார். அவர்களின் மகனைப் பற்றிய நிறவெறி கருத்துகளை உதிர்க்கிறார். உங்கள் குடும்பத்தைத் தொந்தரவு செய்யக்கூடாது என்றால் நான் சொல்லும் இணையதளத்திற்குச் செல்லுங்கள், அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டில் சைரன் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று எச்சரிக்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!