இகவின் பள்ளிப் பருவம் திருநெல்வேலியில் கழிந்தது. அப்போது அங்கே பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் முருகேசண்ணன். இக பத்தாம் வகுப்பில் நுழைந்திருந்த நேரம், வீட்டில் அவருக்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தமிழில் என்றில்லை.. உலகின் சகல மொழிகளிலும் முருகேசண்ணனுக்குப் பிடிக்காத ஒரே ஒரு வார்த்தை...
Tag - நகைச்சுவை
பேப்பரைத் திறந்தாலே கொலைச் செய்தி. மாமியாருக்குக் கத்திக் குத்து. மாமனாரைக் கொன்று ஃப்ரிஜ்ஜில் ஒளித்து வைத்த மருமகள் கைது. நடுத்தெருவுக்கு வந்த நாத்தனார் சண்டை. உலக்கையால் மண்டையில் போட்டு, சாக்குப் பையில் அடைத்து கூட்ஸ் ரயிலில் வீசிய துணிகரம். பார்க்கிறோம் அல்லவா? மாமியார் குடும்பத்தாருடன்...
கனம் கோர்ட்டார் அவர்களே, இங்கு வழக்குத் தொடர்ந்திருக்கும் என் கட்சிக்காரரின் பெயர் செவ்வாய் தோஷம். இந்தப் பெயரால் என் கட்சிக்காரர் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். இந்தப் பெயரை அவருக்கு வைத்தது அவரது தாத்தா. அவர் ஒரு தீவிர செவ்வாய் எதிரி. செவ்வாய்க்கிழமை அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் வந்தது என்ற ஒரே...
இகவுக்குச் சிறுவனாய் இருந்தபோதிலிருந்தே காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று ஒரு கனவு இருந்தது. வாலிபப் பிராயத்தை எட்டியதும், அவனும் பல பெண்களைக் காதல் செய்தான். ஆனால் பாருங்கள்… எந்தப் பெண்ணும் இவனைக் காதல் செய்யவில்லை என்பதால் வேறு வழியின்றி, வீட்டில் பார்த்த பெண்ணே இகவின்...
உங்க ஊரில் மயில் குரைத்ததா? எங்கள் ஊரில் யானை ஊளையிட்டது. ‘கோட் – வேர்ட்’ கரெக்ட் என்று கூறி பெட்டிகளை மாற்றிக் கொண்டு எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்து வந்தார்கள் கள்ளக் கடத்தல்காரர்கள். சென்ற நூற்றாண்டோடு அவர்களின் பொற்காலம் முடிந்துவிட்டது. கோட் – வேர்ட் கடத்தல்காரர்களை விட அதிக அளவு அர்த்தமற்ற சொற்கள்...
முதலில் நாம் அறிமுகம் செய்து கொள்ளலாம். மன்னியுங்கள்… நாம் என்றா சொன்னேன்..? இல்லையில்லை, நான் என்னை யார் என்று சொல்லி அறிமுகம் செய்து கொள்ளப் போவதில்லை. நான் யார் என்பதைச் சொல்லப் போவதில்லை. உங்களிடம் சற்றே எதிர்மறையில் சதிராடிப் புரியவைக்கப் போகிறேன். கட்டுரையின் இறுதியில் நான் சொல்வதற்குள்...
அன்றைய தினம் பொழுது விடிந்ததிலிருந்தே ‘ருத்ரன்’ படத்தை நாலு தடவை பார்த்துத் தொலைத்தவள் போல வெறுப்பாக எரிந்து விழுந்து கொண்டிருந்தாள் இகவின் மனைவி. மனைவியானவளின் எரிச்சல் வசவுகளைத் தாங்கி ஓரளவு ‘எரிச்சல் ப்ரூஃப்’ ஆகவே இக இருந்தான் என்றாலும் இன்றைய எரிச்சலின் காரணத்தை அவனால் யூகிக்கவே முடியவில்லை...
‘புலி வருது, புலி வருது’ என்று பொய்யாகப் பயமுறுத்திய பையனின் கதை நம் எல்லோருக்கும் தெரியும். அதுபோலவே ‘புலி ஜெயிக்கப் போகிறது, புலி ஜெயிக்கப் போகிறது’ என்ற கதையை வருடா வருடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதுவரை புலி ஜெயித்தபாடில்லை. பாண்டா (Panda) தான் தொடர்ந்து ஜெயித்து வருகிறது. பாண்டா...
இம்மாதத் தொடக்கத்தில் கொரோனாவை விட அதிதீவிரமான ஒரு வைரஸை சீனாவில் உற்பத்தி செய்திருக்கிறார்கள். அந்த வைரஸைக் கண்டு மேலை நாட்டு மக்களுக்கு எந்த பயமும் இல்லை. சீனர்கள் பாம்பைத் தலை முதல் வால் வரை பார்ட் பார்ட்டாகச் சமைத்துச் சாப்பிடுவது போல அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் இந்த வைரஸை வைத்து விதவிதமான...
பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஏப்ரல் மாதத்தில் நான் அபுதாபிக்குக் குடிபெயர்ந்தேன். நல்ல கத்திரி வெயிலின் வெப்பம் தெரிந்தது. நமக்கெல்லாம் கத்திரி வெயில் ஆரம்பம் என்று பேப்பரில் பார்த்த உடன் வத்தலும் வடகமும் தான் நினைவிற்கு வரும். மழைநீர் வீணாகும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அவ்வளவுதான். ஆனால்...