Home » வெள்ளியே செவ்வாய்
நகைச்சுவை

வெள்ளியே செவ்வாய்

கனம் கோர்ட்டார் அவர்களே,

இங்கு வழக்குத் தொடர்ந்திருக்கும் என் கட்சிக்காரரின் பெயர் செவ்வாய் தோஷம். இந்தப் பெயரால் என் கட்சிக்காரர் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். இந்தப் பெயரை அவருக்கு வைத்தது அவரது தாத்தா.

அவர் ஒரு தீவிர செவ்வாய் எதிரி. செவ்வாய்க்கிழமை அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் வந்தது என்ற ஒரே காரணத்திற்காக பக்கத்துத் தெரு போஸ்ட் ஆபீஸ் வேலையைத் துறந்த வீரகேசரி. செவ்வாய்க்கிழமைகளில் யார் வீட்டிற்கும் அவர் போக மாட்டார். யாரையும் அவரது வீட்டிற்குள் வரவிடவும் மாட்டார். அதற்காகவே வீட்டு வாசல்படியில் நீல நிறத்தில் ஒரு கோடு போட்டு வைத்திருப்பார். அவரது செவ்வாய்க்கிழமை நோன்பு தெரியாதவர்கள் யாராவது அவரைத் தேடிச் செவ்வாயன்று வந்துவிட்டால் அந்த நீல நிறக் கோட்டைத்தான் எல்லையாகப் பாவிப்பார். எல்லைக் கோட்டைத் தாண்டாமல் எதிரி நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது போல் நடத்தித் திருப்பி அனுப்பி விடுவார்.

காய்ச்சல் நூற்றிப்பத்து டிகிரிக்கு எகிறினாலும் கூட பற்றுப் போட்டுக்கொண்டு வீட்டில் படுத்திருப்பாரே ஒழியச் செவ்வாய்க் கிழமைகளில் மருந்து வாங்கும் பாவத்தைச் செய்யவே மாட்டார். இப்படி ஒரு அதிதீவிர செவ்வாய் விரோதிக்கு ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை அசத கிருஷ்ண அமாவாசை அன்று பிறந்த முதல் பேத்தி தான் என் கட்சிக்காரரான செவ்வாய் தோஷம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!