‘புலி வருது, புலி வருது’ என்று பொய்யாகப் பயமுறுத்திய பையனின் கதை நம் எல்லோருக்கும் தெரியும். அதுபோலவே ‘புலி ஜெயிக்கப் போகிறது, புலி ஜெயிக்கப் போகிறது’ என்ற கதையை வருடா வருடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதுவரை புலி ஜெயித்தபாடில்லை. பாண்டா (Panda) தான் தொடர்ந்து ஜெயித்து வருகிறது. பாண்டா அதன் குண்டு உடலைத் தூக்கிக் கொண்டு கஷ்டப்பட்டு ஓடி எப்படியோ முதல் இடத்தை பிடித்துவிடுகிறது. சிங்கம், புலி போல அசைவப் பிரியர் இல்லை பாண்டா. அது சுத்த சைவம். மூங்கிலின் வேர்கள், தண்டுகள், தளிர்கள் மட்டுமே சாப்பிட்டுக் குண்டான ஜீவன். இப்படிப்பட்ட பத்தியச் சாப்பாட்டைச் சாப்பிட்டுப் பந்தயத்தில் முதலிடத்தைப் பிடிப்பது என்பது சுலபமான காரியமா? எவ்வளவு பெரிய சாதனை! ஆனால் பாண்டாவின் இந்தத் தொடர் சாதனை இம்முறை பறிபோய் விட்டது என்றே பலர் சொல்கின்றனர். என்ன திடீரென்று பாண்டா, புலி என்று மழலையர் கதை சொல்கிறாய் என்று கேட்காதீர்கள். பாண்டா என்பது சீனா. புலி என்பது இந்தியா. பந்தயம் ஜனத்தொகை.
இதைப் படித்தீர்களா?
“உங்களுக்குப் பாஸ்வேர்ட் ஸ்ட்ரெஸ் இருக்கா?” இப்படியொரு கேள்வி நூதனமாய்த் தெரியலாம். ஆனால் சமீப காலங்களில் இக்கேள்வி பரவலாகி வருகிறது. ஒரு சராசரி...
உங்க ஊரில் மயில் குரைத்ததா? எங்கள் ஊரில் யானை ஊளையிட்டது. ‘கோட் – வேர்ட்’ கரெக்ட் என்று கூறி பெட்டிகளை மாற்றிக் கொண்டு எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்து...
Add Comment