Home » உலகம் » Page 47

Tag - உலகம்

உலகம்

இந்தியா 2022

இந்த ஆண்டு, இந்தியா ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற 75வது ஆண்டு என்ற சிறப்பைப் பெற்றது. இந்த ஆண்டில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகளைப் புரிந்து கொள்வோம். அதன் மூலம் 2023ஆம் ஆண்டு எதை நோக்கி நகரும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சட்டமன்றத் தேர்தல்கள்: உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா...

Read More
உலகம்

சிங்கப்பூர்: வானம் தொடும் வீட்டு விலை

தென்கிழக்காசிய நாடுகளில் ஒரு வியப்புக்குறி சிங்கப்பூர். உலகளாவிய பயணங்களைச் செய்தவர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், மத்தியக் கிழக்கு நாடுகளிலும் பயணம் செய்தால் ஒரு எளிய உண்மையை உணர்ந்து வியக்கலாம். மேற்குலகு கொண்டிருக்கும் வேலை, அறிவு மற்றும் கல்விப்புல வாய்ப்புகளை, தென்கிழக்காசிய நாடுகளில்...

Read More
உலகம்

இலங்கை: போதுமடா சாமி!

2020, 2021ம் ஆண்டுகளைப் போலவே 2022-ம் ஆண்டிலும் கொரோனா வைரஸ் தேசத்தை முடக்கும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை செய்திருந்தது. ஆனால் கிருமிக்கு இலங்கையைப் பார்க்கப் பாவமாய் இருந்திருக்க வேண்டும். “எனது இன்னிங்ஸ், உம் நாட்டில் இத்தோடு முடிந்தது. மிச்சத் துன்பத்தை உன்னை ஆள்பவர்களே தருவார்கள்” என்று...

Read More
உலகம்

அமெரிக்கா: மீண்டும் போலியோ

அமெரிக்காவில் 2021 கடைசியில் தொற்று நோய்த் தாக்கங்கள் குறைந்த வேகத்தில், ஒரு கொண்டாட்டம் தேவையாக இருந்தது. வழக்கத்தைவிடப் புது உற்சாகத்தோடும், 32 ஆயிரத்து 256 எல்இடி விளக்குகளோடும், 16 மில்லியனுக்கும் மேலான நிறப்பரிமாணங்களும், பில்லியன் கணக்கில் வடிவங்களும் ஜொலிக்க, 12 அடி விட்டமும் 11 ஆயிரத்து...

Read More
உலகம்

கூடித் தொழில் செய்!

2022ம் ஆண்டு என்பது ஆசியாவின் இரு பழம் பெரும் தலைவர்களின் மிக நீண்ட நாள் அரசியல் கனவுகள் நனவான ஆண்டு. ஒருவர் ரணில் விக்ரமசிங்க. மற்றவர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹீம். ரணிலுக்கு அதிகாரத்தின் உச்சத்தை அடைய இருபத்தெட்டு ஆண்டுகளும், அன்வருக்கு  இருபத்து நான்கு ஆண்டுகளும் எடுத்தன. இரண்டுமே வேறு வேறு...

Read More
உலகம்

ஊர் கூடிக் கொலை செய்வோம்!

நல்ல, அருமையான, நிறைய பார்வையாளர்களைக் கொள்ளக்கூடிய பெரிய விளையாட்டு மைதானம். ஆப்கனிஸ்தானின் ஃபரா மாகாணத்தில் உள்ளது. விழா அங்கேதான் ஏற்பாடாகியிருந்தது. அரசாங்கமே நடத்துகிற விழா என்பதால் ஆரவாரம் சிறிது அதிகம். நீதிபதிகள், அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், மாநிலம் முழுதும் உள்ள...

Read More
உலகம்

ஜி-20யும் ஜிக்களின் அஜண்டாக்களும்

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கிழக்காசிய நாடுகளில் உருவான நிதி நெருக்கடியால் பல நூறு பில்லியன் டாலர்கள் உலகப் பொருளாதாரத்திலிருந்து காணாமல் போயின. வளர்ந்த நாடுகள் பலவும் ஆசியாவின் வளரும் நாடுகளில் பெருமளவு முதலீடு செய்திருந்த காலமது. கணக்கு வழக்கு இல்லாமல் கடனை வாங்கிக் குவித்தன ஆசிய நாடுகள். கடன்...

Read More
ஆளுமை

இப்படியும் ஓர் ஆசிரியர்

“உங்க வீட்ல கொஞ்சம் கூட எதிர்ப்பு வரலயா சார்?” புருவங்களை உயர்த்துகிறேன். பின்னே? ஒரு மனிதன் நான்கு பழைய சப்பாத்துக்களோடு வீடு திரும்பி மாலை முழுதும் அவற்றோடு மல்லுக் கட்டினால், எந்த மனைவிதான் சும்மா இருக்கப் போகிறார்? ஆமாம் யாரந்த மனிதர்? மஹிந்த சார்! ஒரே இரவில் புகழ் பெற்ற ஆசிரியர். சென்ற...

Read More
உலகம்

பூத்தது புது உறவு

டிசம்பர் ஏழாம் தேதி உலக அரசியல் வல்லுநர்கள், ஆட்சியாளர்கள், பொருளாதார நிபுணர்கள் அனைவருடைய கண்களும் சவூதி அரேபியாவில் நிலைகொண்டிருந்தன. சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, சவூதி அரசு கொடுத்த பலமான வரவேற்புதான் அதற்குக் காரணம். ஜின்பிங் வந்த விமானத்தை, சவூதி அரசின் நான்கு விமானப் படை ஜெட்கள், மெய்க்காவல்...

Read More
சமூகம்

பாலின பேதமற்ற சமூகம் சாத்தியமா?

பிருஹன்னளையாக அர்ச்சுனனும், மோகினி அவதாரமாக திருமாலும் இதிகாசங்களில் தங்களை முழுமையாகப் பெண்ணாக உணர்ந்து செயல்பட்ட தருணங்களும் அதைக் கொண்டாடும் விழாக்களும் உண்டு. மாற்றுப்பாலினம் புதிதில்லை. பிறந்த போது பெற்றோர்களாலும் மருத்துவர்களாலும் ஆண் அல்லது பெண் என்று ஓர் அடையாளம் தரப்படுகிறது. அப்படித்தான்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!