2022ம் ஆண்டு என்பது ஆசியாவின் இரு பழம் பெரும் தலைவர்களின் மிக நீண்ட நாள் அரசியல் கனவுகள் நனவான ஆண்டு. ஒருவர் ரணில் விக்ரமசிங்க. மற்றவர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹீம். ரணிலுக்கு அதிகாரத்தின் உச்சத்தை அடைய இருபத்தெட்டு ஆண்டுகளும், அன்வருக்கு இருபத்து நான்கு ஆண்டுகளும் எடுத்தன. இரண்டுமே வேறு வேறு களங்கள் என்றாலும் கூட்டணிக் கூத்துக்களையும், அதிகாரத் துஷ்பிரயோகங்களையும் பார்க்கும் போது எல்லா ஊரிலும் அரசியல் என்பது ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அதுவும் மலேசியாவின் பளபளப்பையும் மீறிக் கடந்த இருபத்தைந்து வருடங்களாக அதன் அரசியல் தளம் நாறிக் கொண்டு இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
67. ஒலி உடல் யாருமற்ற அதிகாலை இருளில் சரஸ்வதியின் கரையில் நின்றுகொண்டிருந்தேன். நதி, மிகவும் அடக்கமான ஓசையினால் மட்டும் தனது இருப்பைச்...
67. பெரிய மனிதர்களுக்கான பழம் மே 7 அன்று இரவு, காந்தி ‘மெட்ராஸ் மெயில்’ என்கிற ரயிலில் பெங்களூருக்குப் புறப்பட்டார். ஆனால், அவருடைய...
Add Comment