உக்ரைன் – ரஷ்யப் போர் இன்னும் முடிந்தபாடில்லை. இன்னும் நீட்டிக்கவே இருபுறமும் அணிகள் கைகோத்து உதவிபுரியத் தொடங்கியுள்ளன. பகைவனுக்குப் பகைவன் நண்பன் என்கிற ரீதியில், உலக நாடுகள் ஒன்றுசேரும் முயற்சியில் பகிரங்கமாக ஈடுபட்டு வருகின்றன. இவை இந்தப் போருக்காக மட்டும் கைகோக்க நினைக்கவில்லை. பிற்காலப்...
Tag - அமெரிக்கா
கடந்த மூன்று வருடங்களாகக் கோவிட் பரவியது எப்படி..? பரிசோதனைக் கருவிகள் மற்றும் தடுப்பூசிகள் சரியாக வேலை செய்கின்றனவா..? உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் தடுப்பூசியின் அவசியத்தை விளக்குவது, விநியோகிக்க ஆலோசனை வழங்குவது என்று மூச்சுக்கூட விடமுடியாமல் பலதரப்பட்ட வேலைகளில் மூழ்கியிருந்தது சி.டி.சி. (CDC...
இருபது வருடங்களுக்கு முன், இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்டதும் அமெரிக்க மக்கள் அதீத உணர்ச்சிப்பெருக்கில் இருந்தனர். யார் அல்லது எந்த அமைப்பு இந்த தாக்குதல்களின் பின்னே இருக்கிறார்கள் என்று அறிந்து அவர்களை நீதிக்கு முன் நிறுத்த மக்கள் விரும்பினார்கள். அப்போது அதிபராக இருந்த புஷ், ஈராக் பெரிய காரணம்...
“டெஸ்லா வாகனத்தில் பொருத்தியிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI சிஸ்டம் ) மனிதனை விட அதிபுத்திசாலி. இனி டெஸ்லா வாகனத்தை இயக்க நீங்கள் மனிதனை நம்ப வேண்டியதில்லை.” 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெஸ்லா கம்பெனியின் தலைமைச் செயல் அதிகாரி இலான் மஸ்க் தானியங்கி என்ற FSD ( Full Self...
ஹண்டுரஸ். மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு பாவப்பட்ட நாடு. உள்நாட்டுச் சண்டை, போதை மருந்துக் கடத்தல், கொலை, கொள்ளை போன்ற எண்ணற்ற வன்முறைப் பிரச்னைகள். இயற்கை அன்னையும் இந்நாட்டு மக்களுக்குக் கருணை காட்டவில்லை. 1998-ம் ஆண்டில் வீசிய கடுமையான சூறாவளி நாட்டின் அடிப்படைக் கட்டுமானப் பணிகளையும் வளங்களையும்...
அமெரிக்க MQ-9 ரக ஆளில்லாத ட்ரோன் விமானம் மார்ச் 14ஆம் தேதி, கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. ரஷ்யாவின் இரண்டு Su-27 ரகப் போர் விமானங்களே இந்த ட்ரோனை வீழ்த்தியதாக, அமெரிக்கா மார்ச் 16ஆம் தேதி வீடியோ ஆதாரங்களோடு குற்றம் சாட்டியுள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்துவரும் ரஷ்யா உக்ரைன் போர்...
சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் ஒரு முக்கியமான சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. அமெரிக்க அரசின் நிதியுதவி அல்லது நிதிச் சலுகைகள் பெறும் நிறுவனங்கள் தங்கள் மனிதவள உறுப்பினர்களில் 7.5% மாற்றுத் திறனாளர்களை நியமிக்க வேண்டும் என்ற திருத்தமே அது. அமெரிக்க நாடு தழுவிய முதுமை மற்றும் உடல்...
கடந்த இரண்டு மாதங்களாக இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ், ஹைபா, மேற்கு ஜெரூசலம் எங்கும் லட்சக்கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமி நெத்தன்யாகு அரசு முன்மொழிந்திருக்கும் புதிய நீதித்துறை சீர்திருத்தங்களுக்கு எதிராகக் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேலிய வான்படை வீரர்களில் பெரும்பாலானோர் அரசு...
அன்பினால் ஆளும் தலைவி ஒகிள்வி என்பது உலகில் மிகவும் பிரபலமான ஒரு விளம்பர ஏஜென்சி. இதனை 1948-ம் ஆண்டு டேவிட் ஒகிள்வி என்பவர் ஆரம்பித்தார். எழுபத்தைந்து ஆண்டுகளாக இயங்கும் இந்நிறுவனம் தற்போது தொண்ணூற்று மூன்று நாடுகளில் நூற்று முப்பத்தொரு அலுவலகங்களைக் கொண்டதொரு பெரிய பன்னாட்டு விளம்பர நிறுவனம்...
மின்சாரம்.அலைபேசி.இணையம்.தொலைக்காட்சி.இயந்திர வாகனங்கள்.கல்வி.இவையெல்லாம் தேவையில்லாத ஆணிகள்.பிடுங்கி எறியுங்கள் என்று யாராவது நம்மை கட்டாயப்படுத்தினால் ஏற்றுக்கொள்வோமா? சொல்கிறவர்களுக்கு மனநிலை சரியில்லை என்றுதான் நினைப்போம்.ஆனால் இந்த நூற்றாண்டிலும் ஒரு சமூகத்தில் லட்சக்கணக்கான மக்கள் இந்த...