ஹண்டுரஸ். மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு பாவப்பட்ட நாடு. உள்நாட்டுச் சண்டை, போதை மருந்துக் கடத்தல், கொலை, கொள்ளை போன்ற எண்ணற்ற வன்முறைப் பிரச்னைகள். இயற்கை அன்னையும் இந்நாட்டு மக்களுக்குக் கருணை காட்டவில்லை. 1998-ம் ஆண்டில் வீசிய கடுமையான சூறாவளி நாட்டின் அடிப்படைக் கட்டுமானப் பணிகளையும் வளங்களையும் 75 விழுக்காடு சீரழித்து விட்டது. போதாததற்கு கோவிட் காலத்தில் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கி விட்டது. வாழத் தகுதியில்லாத நாட்டில் யார்தான் வசிக்க விரும்புவார்கள்.? அப்பாவி மக்களுக்குச் சொர்க்கமாகத் தெரிந்தது அருகே இருந்த அமெரிக்கா.
இதைப் படித்தீர்களா?
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். அவர் அந்தப் பதவிக்கு வந்தது அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல் தங்கள் நாட்டுக்கும் நல்லது...
புரட்சி எல்லாம் செய்து இரண்டாவது முறை விடுதலை பெற்ற சிரியாவின் தற்போதைய நிலை என்ன? சிரியாவில் பத்தில் ஏழு பேருக்கு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய...
Add Comment