முறையான முதலீட்டுத் திட்டம் என்பதைத்தான் சிஸ்டேமடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்று கூறுகிறார்கள். ஆனால் நம் மனத்தில் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) என்றதும் பங்குச்சந்தை பரஸ்பர நிதித் (Mutual fund) திட்டத்தில் முதலீடு செய்வது என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது. நாம் முறையாகத் தொடர்ந்து...
Author - சிவசங்கரி வசந்த்
பொங்கலுக்கு மாக்கோலம் போடுவது ஒரு கலை. முதலில் அரிசியை ஊறவைத்து, ஆட்டுக் கல்லில் நன்றாக அரைத்து, அளவாகத் தண்ணீர் சேர்த்து பதமாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கணவரது புது வெள்ளை வேஷ்டியை எடுத்துச் சரியாக நாலுக்கு நாலு இஞ்ச் அளவில் நான்கைந்து துணிகளை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி...
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2022ம் ஆண்டு எப்படி இருந்தது? பெரிய அதிரடிகள், கவலைகொள்ளத்தக்க நிகழ்வுகள் ஏதுமில்லை என்றாலும் வானளாவப் புகழ்ந்துகொண்டாடவும் ஒன்றுமில்லை. கோவிட் பயம் சற்றே வடிந்த ஆண்டு என்பதால் உலகெங்கும் இருந்த அந்த உற்சாகப் பரபரப்பு இங்கும் இருந்தது. * அமீரகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக...
புத்தாண்டு தீர்மானங்கள் எடுப்பதெல்லாம் சரி தான். ஆனால் அதை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். எதற்காக நானுண்டு என் பொடி மசால் தோசை உண்டு என்று சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் என்னை வம்புக்கு இழுக்க வேண்டும்.? “இப்படி மசால் தோசையாகச் சாப்பிடுவது நல்லதில்லை. புத்தாண்டில் இருந்தாவது காய்கறி, பழங்கள் மட்டும்...
கடந்த இருபது வருடங்களாக என் பாதையிலிருந்த பல களைகளைச் சலிக்காமல் வெட்டிக் கொண்டே வந்த பின்புதான் எழுத்து என்னும் பாதை கண்களுக்குப் புலப்பட்டது. உண்மையில், எனது அடையாளம் ஒளிந்திருப்பது எழுத்தில்தான் என்று நான் கண்டு பிடித்த ஆண்டு 2022. அபுதாபிக்கு வசிக்க வந்த நாள் முதல் எனக்கு இரண்டு விஷயங்கள்...
நான் நர்சரி டீச்சர் என்பதாலோ என்னவோ எங்கள் நண்பர்கள் எல்லோரும் அவர்கள் வீட்டுக் குழந்தைகளை எங்கள் வீட்டில் விட்டுவிட்டு ஷாப்பிங் போகும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது எனக்குக் கடினமான விஷயம் இல்லை. ஆனால் அவர்களுக்கே உரிய பிரத்தியேக பாஷையைப் புரிந்து கொள்வது தான்...
மொசூல் அணை ஈராக்கின் வடமேற்குப் பகுதியில் டைகிரிஸ் ஆற்றின் மீது அமைந்துள்ளது. மொசூல் நகருக்கு வடமேற்கே சுமார் 60 கிமீ தொலைவில் இருக்கும் ஈராக்கின் மிகப் பெரிய அணை. முன்பு இது ‘சதாம் அணை’ என்று அழைக்கப்பட்டது. சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் ஈராக்கின் நீர்வளங்களை நிர்வகிப்பதற்காகப் போடப்பட்ட...
சென்னை புத்தகக் காட்சியை சர்வதேசத் தரத்தில் நடத்தத் தமிழக அரசு நினைக்கிறது. அதன் முதல் நடவடிக்கையாக வரும் ஜனவரியில் மூன்று நாள் சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் அக்டோபர் 19 முதல் அக்டோபர் 22...
திருமணம் முடிந்து வெளிநாட்டிற்குச் சுற்றுலாச் செல்வது என்பது வேறு. வெளிநாட்டிற்கு வந்து குடும்பம் நடத்துவது என்பது வேறு. வெளிநாட்டில் குடும்பம் நடத்தவரும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவை. ஃபாரின் மாப்பிள்ளை தேடுவோர் படித்து வைத்துக்கொள்ளவும். உடை. ஒரு பத்து நாட்களுக்கான...
2022-ம் ஆண்டுக்கான உலகின் பில்லியனர்கள் பட்டியலில் முப்பது வயதிற்குட்பட்ட பன்னிரண்டு பேர் இடம்பிடித்துள்ளனர். என்ன தொழில் செய்து இவர்கள் பில்லியனர் ஆனார்கள்? தேடிப் பார்த்தபோது சுவாரசியமாக இருந்தது. 1. Andy Fang – ஆண்டி ஃபாங்கின் வயது 29. அவரது பெற்றோர் இருவரும் தைவானில் இருந்து...