Home » ‘என் கனவுகள் பிரம்மாண்டமானவை…’ – பால்குனி நாயர்
பெண்கள்

‘என் கனவுகள் பிரம்மாண்டமானவை…’ – பால்குனி நாயர்

ஒரு மனிதனின் ஐம்பதாவது வயது என்பது ஆன்மீகத் தத்துவம் பேசுவோரின் கூற்றுப்படி, ஆடி அடங்கும் வயது. அமுத வாக்கு புகழ் ரஜினிகாந்தின் ‘எட்டு எட்டாய் வாழ்க்கையைப் பிரிச்சிக்கோ ராமையா’ கான்செப்ட்டின்படி பார்த்தாலும் ஓய்வுபெறுவதற்கு நெருக்கத்திலிருக்கும் வயது. சரி…. ஐம்பது வயது ஆண்களுக்கே இந்தக் கதி என்றால், பெண் என்பவள் விரதமிருக்கவும், விருந்து படைக்கவுமே சிருஷ்டிக்கப்பட்ட ஆத்மா என்று பெரும்பான்மையோரால் நம்பப்படும் சமூகத்தில், ஒரு பெண் அதுவும் தன் ஐம்பதாவது வயதில் பிசினஸில் கால் பதித்துத் சாதித்ததை என்னவென்று சொல்வது..?

பால்குனி நாயர். இன்றையத் தேதியில் இந்தியாவின் ஃபேஷன் இண்டஸ்ட்ரியில் டெண்டுல்கர் அவர். அவரது துறையில் அவரைத் தவிர கண்ணுக்கெட்டிய தூரம் எதிரிகள் கிடையாததுதான் இப்போதைக்கு அவருக்கு ஆறுதலான செய்தி. அவரது நைக்கா நிறுவனம் சத்தமில்லாமல் சாதனைகள் பல செய்து கொண்டிருக்க, பால்குனி நாயரின் சொத்து மதிப்பு ஏழு பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டிவிட்டது. பால்குனி இன்று இந்திய அளவில் முதல் இருபது பில்லியனர்களில் ஒருவர் மட்டுமல்ல ‘The wealthiest self made women’ என்ற கெளரவ நாமம் பெற்ற பெண்மணியும் கூட.

பொதுவாய் மாதச் சம்பளக்காரர்களுக்கு பிசினஸில் துணிவாய் இறங்கிப் பார்ப்பதை நினைத்தாலே உதறல் எடுத்துவிடும். அரச ஊழியராய் இருந்தால் மேற்கொண்டு விபரிக்கவே தேவை இல்லை. கல்லறைக்குப் போகும் வரை பென்ஷன் சுகம் தரும் வாழ்வுதான் பலரது விருப்பத்திற்குரிய தேர்வு. ஆனால் பால்குனி இந்த விதிக்கு விலக்கு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!