Home » நைஜர்: வெடிக்கிறது யுத்தம்; பதைக்கிறது உலகம்
உலகம்

நைஜர்: வெடிக்கிறது யுத்தம்; பதைக்கிறது உலகம்

எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஜூலை 26, 2023 அன்று மேற்கு ஆப்பிரிக்காவில் பன்னிரண்டு இலட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் சுமாராக இரண்டரைக் கோடி மக்கள் வாழும் நைஜர் என்ற தேசத்தில் ராணுவப் புரட்சி நடந்தது. 2021-ம் ஆண்டு மக்கள் ஆணை மூலம் பதவிக்கு வந்த மொஹமட் பஸும் என்ற அதிபர் நகர்த்தப்பட்டு ராணுவத் தளபதி அப்துர்ரஹ்மான் ஷியானி அதிபராக முடிசூடிக் கொண்டார். ‘அது சரி.இதென்ன சரித்திரத்தில் நடக்காத விடயமா, அதுவும் ஆப்பிரிக்கா கண்டத்தில் இப்படியான குழப்பங்களுக்கு என்ன குறை’ என்று உலகம் அசுவாரசியமாய்க் கடந்து போக முனைந்த போது, ராணுவ ஆதரவாளர்களும் போராட்டக்காரர்களும் தலைநகர் நியாமியில் இருக்கும் பிரெஞ்ச் தூதரகத்தைக் கண் மூடித்தனமாய்த் தாக்கி பிரெஞ்ச் தேசியக் கொடியைக் கழற்றி, எரிக்கும் காட்சிகள் டெவலப்பிங் ஸ்டோரிகளாக வெளிவரத் தொடங்கின. அடுத்தடுத்து நடந்தவைதான் ஆச்சர்யத்தின் உச்சம்.

‘ரஷ்யா போன்று ஒரு சமத்துவ நாடு எங்குமே கிடையாது. ரஷ்யா எம்மைப் பிழிந்து சக்கையாக்குவதில்லை. எங்களைப் பாருங்கள்.எங்களிடம் தங்கம் இருக்கிறது. யுரேனியத்திற்கு என்ன பஞ்சம்? அதுமட்டுமா பெறுமதியான வைரங்களும் இருக்கின்றன. இருந்தாலும் வறுமையின் நவீன சாட்சியாய் நாம் ஒரு மோசமான அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுக்குப் பிரான்ஸோ அதன் பாதுகாப்போ தேவையில்லை. அத்தனை பிரான்ஸ் துருப்புக்களும் உடனே வெளியேற வேண்டும்’ என்றவாறு ராணுவ ஆதரவாளர்கள் ரஷ்யக் கொடிகளை ஏந்தி ‘பிரான்ஸ் ஒழிக, விளாதிமிர் புட்டின் நீடுழி வாழ்க’ போன்ற கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். ‘இதென்ன ஒன்றும் புரியாத அக்கப் போர்’ என்று சேனல் மாற்றினால், ‘சட்டத்தின் ஆட்சிக்கு நைஜர் திரும்ப வேண்டும்’ என்றும் ‘எந்தவொரு சட்டத்திற்குப் புறம்பான ஆட்சி மாற்றத்தையும் ரஷ்யா ஆதரிக்காது’ என்றும் ரஷ்யாவின் கலாசாரத் தலைநகரான சென் பீட்டர்ஸ்பேக்கில் இருந்து ரஷ்ய – ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் அதிபர் விளாடிமிர் புட்டின் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். ‘வாக்னர்’ எனப்படும் ரஷ்யாவின் தனியார் ராணுவத் தலைவர் பாவேல் ப்ரிகோஷினோ, “மேற்குலகின் காலனித்துவம் நைஜரில் இருந்து துடைத்தெறியப்பட்டதை அகமகிழ்வோடு கொண்டாடுவதாகவும் தன் ராணுவத்தின் தேவை ஏற்பட்டால் உதவி செய்ய ஆர்வமாய் இருப்பதாகவும் , நைஜரில் சட்டம் ஒழுங்கைத் திரும்பக் கொண்டுவரப் பாடுபடப் போவதாகவும்” சொல்லிக் கொண்டே போகிறார். இவ்வளவு விபரங்களும் எப்பேர்ப்பட்ட ‘குடி’மகனுக்கும் போதை தெளிந்து இயல்பாகத் தாராளமாய்ப் போதும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!