Home » குற்றமும் தண்டனையும்
நம் குரல்

குற்றமும் தண்டனையும்

ஓர் அமைச்சர் வழக்கில் சிக்கினார். சிறைக்குச் சென்றாலும் துறையற்ற அமைச்சராகத் தொடர்வார் என்றார்கள். குற்றமற்றவர் என்று ஊருக்குச் சொல்லும் முயற்சியாக அது பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். இன்றுவரை வழக்கிலிருந்தல்ல; ஜாமீனில்கூட வெளியே வரவில்லை. அவரது அமைச்சர் பதவி தொடர்ந்தே தீரும் என்று அன்றைக்கு அடம் பிடித்த யாரும் இன்று அவர் ராஜிநாமா செய்தபோது ஒரு சொல் பேசவில்லை.

இன்னோர் அமைச்சரின் மீது வழக்குப் பிடிகள் இறுகிக்கொண்டிருக்கின்றன. இதுவும் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் முன்வைக்கப்படும். தேர்தல் சமயத்தில் ஆளும் திமுகவின் பெயரைக் கெடுப்பதற்காக மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சியாகச் சொல்வார்கள்.

சொல்லி வைத்தாற்போல வேறொரு கட்சிப் பிரமுகர் போதைக் கடத்தல் வழக்கில் சிக்கினார். சிக்கியவர் உடனடியாகத் தலைமறைவாகியிருப்பதும் இப்போது வரை கைது செய்ய முடியாதிருப்பதும் அவர் செய்த குற்றங்களை வெட்டவெளிச்சமாக்குகின்றன. கட்சியிலிருந்து அவரை நீக்கியது மட்டும்தான் திமுகவின் பதில் நடவடிக்கையாக இருந்திருக்கிறதே தவிர, ஒரு குற்றவாளிக்குப் பொறுப்பும் பதவியும் கொடுத்து இத்தனை காலம் ஆதரித்து வந்தது பற்றிய ஒரு சொல் வருத்தம்கூடத் தெரிவிக்கப்படவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!