Home » மஞ்சும்மல் பாய்ஸ் – நிஜமும் நிழலும்
வெள்ளித்திரை

மஞ்சும்மல் பாய்ஸ் – நிஜமும் நிழலும்

“உள்ளே விழுந்தது யாரோ கிடையாது சார். என் நண்பன். ஒன்பது பேராய் வந்து எட்டு பேராய்த் திரும்பப் போகிற எண்ணம் எங்கள் யாருக்கும் கிடையாது. அவன் உயிரோடு இருக்க மாட்டான் என்ற எண்ணமே எங்களுக்கு வரவில்லை. ஒரு சின்ன சத்தம், ஒரு அழுகை எங்கள் காதில் விழுந்ததுதான் தாமதம்…. இதைக் கடைசிவரை பார்த்து விடுவது என்று முடிவெடுத்தோம். தீயணைப்புத் துறையினர் உள்ளே இறங்கத் தயங்கியதும் கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. நான் இறங்குகிறேன். சுபாஷோடு தான் வெளியே வருவேன் என இறங்கிவிட்டேன்” என்கிறார் குட்டன் என அழைக்கப்படும் சிஜு டேவிட். இவர்தான் குணா குகைப் பள்ளத்தில் விழுந்த தன் நண்பனை உள்ளே இறங்கி உயிரைப் பணயம் வைத்து மீட்டு வந்தவர். நிழலாய் நீங்கள் திரையில் பார்த்ததன் நிஜப் பிம்பம்!

கேரளம் மற்றும் தமிழகத்தில் மட்டுமல்ல. இன்று உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு பாடல் ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே…’ அதற்கான ஒரே காரணம் ஒரு திரைப்படம்- ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.

குணா குகை என்பது கமலஹாசனால் கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. பிரிட்டிஷ் அதிகாரியான பி.எஸ்.வார்டு என்பவரால் 1821-ம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டது. ‘டெவில்ஸ் கிட்சன்’ (சாத்தானின் சமையலறை) என்பது அந்தக் குகைக்கு அவர் இட்ட பெயர். வவ்வால்கள் மட்டுமே கூட்டமாக வாழும் ஒரு குகை அது. அந்த இடத்திலிருந்து பார்த்தால் கொடைக்கானலின் மொத்த அழகையும் கண்டு ரசிக்க முடியும். என்ன….. தவறி விழுந்தால் நேராக வத்தலக்குண்டுதான். ஆனால் உயிரோடு என்பதற்கு உத்தரவாதம் இல்லை. வத்தலக்குண்டு வயா சொர்க்கம் (அ) நரகம்!

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!