Home » மீட்டர் பொருத்திய நூலகங்கள்
புத்தகம்

மீட்டர் பொருத்திய நூலகங்கள்

‘ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது’ என்பார்கள். அறிவு தனது கண்களைத் திறக்கும்போது, அறியாமையில் செய்யப்படும் தவறுகளும்,குற்றங்களும் நிறுத்தப்படுகின்றன அல்லது குறைக்கப்படுகின்றன. ஒருவர் தனது அறிவினை பெருக்கிக் கொள்வது மட்டுமே அவரின் முறையான வளர்ச்சியாக கருதப்படும். அந்த அறிவினை பெருக்கிக் கொள்வதற்கு அவரின் சுய அனுபவம் குறைந்த விழுக்காடுதான் உதவுகிறது. அடுத்தவர்களின் அனுபவத்தின் மூலமே சிலசமயம் நாம் நம்மை ஆத்மப்பரிசோதனை செய்துகொள்ள வேண்டியுள்ளது. அறிவினை பெருக்கிக்கொள்ள வேண்டியுள்ளது. ஹரிச்சந்திரன் நாடகத்தினை பார்த்த பின்பு மகாத்மாவின் மனதில் ஏற்பட்ட மாறுதல் இதற்கு ஓர் உதாரணம்.

அடுத்தவரின் அனுபவத்தினை நாம் எப்படிப் பெற்றுக்கொள்வது..? இந்த விஷயத்தில் புத்தகங்கள் மனிதர்களின் மனதோடும், அறிவோடும் நேரடியாக உறவாடுகின்றன. புத்தகங்களை வாசிப்பதை குடும்பம் குடும்பமாகக் கொண்டாடிக் கொண்டு வந்தோம். வார இதழ்கள், மாத இதழ்கள், நாவல்கள் ஆகியவைகள் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை ஆகிவந்த காலம் அது. அப்போது லட்சக்கணக்கில் பிரதிகள் விற்ற வார இதழ்களின் விற்பனை எண்ணிக்கை தற்போது சில ஆயிரங்களே.. என்று கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டன. மாத இதழ்களின் நிலையோ கேட்கவே வேண்டாம் என்ற அளவில்தான். செய்தித்தாள்கள் மட்டும் அரசியல், சினிமா, விளையாட்டுச் செய்திகளின் புண்ணியத்தில் காலம்தள்ளிக் கொண்டிருக்கின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • அருமையான பதிவு, இப்படி ஒரு முயற்சி நடக்கிறது என்று இப்பொழுது அதன்
    தெரியும். நல்லது தொடரந்து நடக்கட்டும்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!