Home » குலசை தசராவும் ஆண் பிள்ளைக் காளிகளும்
திருவிழா

குலசை தசராவும் ஆண் பிள்ளைக் காளிகளும்

‘தசராப் பண்டிகை’ என்றாலே ‘மைசூரில் நடக்கும் திருவிழா, தெரியுமே’ என்பீர்கள். அந்த அளவுக்கு கர்நாடக மாநிலத்தில் மைசூரில் நடைபெறும் தசரா உலகப் பிரசித்தம். அதேபோலத் தமிழகத்தில் அதுவும் தென்மாவட்டங்களில் மிகவும் சிறப்பாக, வித்தியாசமாகத் தசரா திருவிழா கொண்டாடப்படும் இடம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம்.

திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமாரி செல்லும் வழியில் இருபது கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர். இந்த ஊரில் மட்டும் நவராத்திரி விழாவே தசராவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் வீச்சு வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. நூறாண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் இதைக் கொண்டாட இந்த ஊரைச் சுற்றியுள்ள சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும். சில குழுக்கள் 80 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருவது இந்த விழாவிற்கு இந்தப் பகுதி மக்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. “சில குழுக்கள் முறையாகப் பதிவு செய்யாததால் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால் ஆயிரம் குழுக்களுக்கு மேல் இருக்கிறது” எனச் சொன்னார் முத்தாலம்மன் குழு என்ற குழுவைச் சார்ந்த ஒருவர்.

உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, மும்பை, கோவா, மைசூரு என நாடெங்கும் உள்ள மக்கள் இங்கு வருவது வழக்கம். வெளிநாட்டவர்களும் இந்த விழாவைக் காண குழுமுவார்கள். கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதால் பல ஆண்டுகளுக்கு முன் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கடற்கரைப் பகுதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!