மெக்ஸிகோ என்பது ஒரு புதையல் பூமி. புதையல் என்றால் தங்கப் புதையல், பணக்கட்டுப் புதையல் அல்ல. தோண்டத்தோண் மனித உடல்கள் கிடைக்கும் பயங்கரப் பிராந்தியம். மிகையல்ல. பல காலமாகவே கொன்று புதைக்கப்பட்ட குற்றங்களின் பேட்டைப் பட்டியலில் மெக்ஸிகோவுக்கு முதல் வரிசை இடம் உண்டு. குவடலஹாரா நகரின் புறநகர்ப்...
Author - ஶ்ரீதேவி கண்ணன்
ஹமிதா பானு என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மல்யுத்த வீராங்கனை என்று சொன்னாலாவது நினைவுக்கு வருகிறாரா? அநேகமாக இராது. இந்த தேசம் முற்றிலுமாகப் புறக்கணித்த, நிராகரித்த, அவமானப்படுத்திய, படாத பாடு படுத்திய ஒரு பெரும் வீராங்கனை அவர். விளையாட்டுத் துறையே ஆண்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த...
முதலில் நாம் அறிமுகம் செய்து கொள்ளலாம். மன்னியுங்கள்… நாம் என்றா சொன்னேன்..? இல்லையில்லை, நான் என்னை யார் என்று சொல்லி அறிமுகம் செய்து கொள்ளப் போவதில்லை. நான் யார் என்பதைச் சொல்லப் போவதில்லை. உங்களிடம் சற்றே எதிர்மறையில் சதிராடிப் புரியவைக்கப் போகிறேன். கட்டுரையின் இறுதியில் நான் சொல்வதற்குள்...
ட்விட்டரைச் சர்ச்சைக்குரியதாகவும் பரபரப்பாகவும் வைத்திருப்பவர் எலான் மஸ்க். இவர் தற்போது ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாகியை நியமித்திருக்கிறார். இத்தளத்தை மாற்றி அமைக்க லிண்டா யாக்கரினோவுடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார் எலான் மஸ்க். அவர் கடந்த ஆண்டு...
சன்னா மரின், பின்லாந்து பிரதமர். மிக இளம் வயதில் இப்பதவிக்கு வந்தவர். உலகின் இளைய தலைவர் என்ற பெருமை பெற்றவர். இளம் தலைவர் என்றால் அறுபது வயதில் நம்மூர் இளைஞர் அணித் தலைவர் போல் கற்பனை செய்துகொள்ளக் கூடாது. 1985-இல் பிறந்தவர். 2019இல் அதாவது முப்பத்து நான்கு வயதில் பின்லாந்தின் பிரதமர் பதவியை...
கடந்த வாரம் நாளிதழில் செய்தி வந்தது. தமிழில் ஆயிரக் கணக்கான படங்கள் எடுக்கப்பட்டு வெளியாகாமல் இருப்பதாக அதில் சொல்லியிருந்தார்கள். படங்கள் நின்று போவது நமக்குத் தெரியும். ஆயிரக் கணக்கிலா? விசாரிக்கக் களமிறங்கினால் ஆம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். ரஜினிக்கும் சில படங்கள் பாதியில்...
நமது சமூக ஊடகங்கள் இன்றைக்கு நைட்டி குறித்த ஆராய்ச்சியில் மூழ்கியிருக்கிறது. ஒரு மாறுதலுக்கு நாம் மினி ஸ்கர்ட்டைக் குறித்துச் சிறிது தெரிந்துகொள்வோம். பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப்புரட்சி, பழுப்புப்புரட்சி போன்ற புரட்சிகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது உணவு, பால், கடல் உணவு, காபி...
சென்னைத் தீவுத் திடலில் டிரைவ் இன் உணவகமும் திறந்தவெளித் திரையரங்கும் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று அங்கே பார்வையிடச் சென்றோம். தமிழ்நாடு சுற்றுலாத்துறைதான் இந்த ஏற்பாட்டைச் செய்து நடத்திக் கொண்டிருக்கின்றது. தீவுத் திடல் என்றாலே பொருட்காட்சி என்ற அடையாளத்தை மாற்றி ஆண்டு...
உடன் பணிபுரியும் ஒருத்தியின் குழந்தை இரண்டாம் வகுப்புப் படிக்கிறாள். குழந்தைக்கு டெஸ்ட் என்றால் போதும்…. உடனே லீவு போட்டுவிட்டுக் குழந்தைக்குச் சொல்லித்தரப் போய்விடுவாள். நம் கல்வி முறைக்கு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்விற்காக பெற்றோர்கள் விடுமுறை எடுத்துக்கொள்வார்கள். வீட்டில்...
இந்த வெயிலில் ஒருநாள் மதிய உணவை ஹோட்டலில் முடித்தோம். உண்டது சைவ உணவாக இருந்தாலும் வெயிலைத் தணிக்கத் தேவைப்பட்டது பன்னீர் சோடா. ஆர்டர் கொடுத்தால் அது பல வண்ணங்களிலும் சுவைகளிலும் இருப்பது தெரிய வந்தது. முன்பைப் போல் சாதாரண பாட்டில்களில் வருவதைவிட, கோலி அடைத்த பாட்டில்களில் வருவது ட்ரெண்ட்...