Home » Archives for ஶ்ரீதேவி கண்ணன் » Page 5

Author - ஶ்ரீதேவி கண்ணன்

Avatar photo

சந்தை

சந்துக்குள் ஒரு சமுத்திரம்

இந்தியாவில் எலக்டிரானிக்ஸ் பொருள்களுக்கான பெரும் சந்தைகளைப் பட்டியலிட்டால் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது சென்னையில் உள்ள ரிச்சி தெரு. அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு எதிரில் எந்தச் சந்தில் சென்றாலும் மின்னணு சாதனங்கள் நிறைந்த கடைகள் உங்களை வரவேற்கும். பொதுப் போக்குவரத்தைப்...

Read More
சமூகம்

எல்லாம் மாயா!

தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் இவான், மெக்சிகோவின் யுகடன் தீபகர்ப்பத்தில் புதைந்திருக்கும் புதிய மாயா நகரம் ஒன்றைக்  கண்டுபிடித்திருக்கிறார். இவர் இதைக் கண்டுபிடிக்க முப்பது ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார். 2013-ஆம் ஆண்டு அவரும் அவரது குழுவினரும் சேர்ந்து ஒரு நகரத்தைக் கண்டுபிடித்தனர். இது 8-ஆம்...

Read More
உலகம்

படிக்காதே! எழுதாதே! புத்தகம் வெளியிடாதே!

ஆப்கனை ஆளும் தாலிபன் அரசின் நவீன திருவிளையாடல்களின் அடுத்தக் காட்சி அரங்கேறியிருக்கிறது. இம்முறை பெண்கள், கல்வி, வேலைவாய்ப்பு, அழகு நிலையங்கள் எல்லாம் இல்லை. புத்தகங்கள். ஆம். படிக்காதே. எழுதாதே. பதிப்பிக்காதே. புத்தகத் துறையை ஓர் அபாயகரமான துறையாக அவர்கள் கருத ஆரம்பித்திருப்பது இப்போது தெரிய...

Read More
ஆன்மிகம்

சிவன், ராமன், சீதை மற்றும் கொஞ்சம் அமைதி

ராவணனைக் கொன்றாகிவிட்டது. சீதை மீட்கப்பட்டாள். இனி என்ன? ஊர் திரும்ப வேண்டியதுதான். ராமனும் அவனது படையினரும் புறப்பட்டு ராமேஸ்வரம் வந்து இறங்குகிறார்கள். வீசா அவசியமற்ற காலம் என்றாலும் சடங்கு சம்பிரதாயங்கள் நிறைந்த காலம். கொல்லப்பட்ட ராவணன் ஓர் அந்தணன். கொன்றது ராமனே என்றாலும் பிரம்மஹத்தி தோஷம்...

Read More
இயற்கை

இந்த வருடம் மழை எப்படி?

இந்த வருடம் வெயிலைப் போலவே மழையும் வெளுத்து வாங்கும் என்கிறார்கள். ஏற்கெனவே இந்தியாவின் பல வட மாநிலங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்க ஆரம்பித்துவிட்டன. காரணம் கேட்டால், பருவநிலை மாற்றம். அப்படி என்னதான் நடக்கிறது இயற்கைக்கு? எல்நினோ குறித்தும் தற்போதைய மழை, காலநிலை மாற்றம் குறித்தும் கேட்டறிய...

Read More
வரலாறு

சாது மிரண்டால் நாடு கொள்ளாது!

சாதுக்களில், நாக சாதுக்கள் என்று ஒரு பிரிவினர் உண்டு. கும்பமேளாவின் சுவாரஸ்யமான அம்சமே ஆயுதமேந்தி இவர்கள் கூடுவது தான். இந்தியாவில் ஆயுதமேந்தும் சாதுக்கள் இவர்கள் மட்டும்தான். ஈசனிடம் பக்தி கொண்ட துறவிகள்தான் ஆயுதமேந்தி நிற்கிறார்கள். இந்தியாவின் புனித மனிதர்களாக நாகாக்கள் மதிக்கப்படுகிறார்கள்...

Read More
விளையாட்டு

ஓ, என்னருமைக் குட்டைப் பாவாடையே!

எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? நம் ஊரில் டென்னிஸ் பார்க்கிறவர்கள் அதிகம். விம்பிள்டன், ஃப்ரெஞ்ச் ஓப்பன், ஆஸ்திரேலியன் ஓப்பன் என்று எங்கே எதை ஓப்பன் செய்தாலும் உட்கார்ந்துவிடுவோம். அவ்வளவு ஆர்வம் அதிலுண்டு. ஆனால் உலக அளவில் ஜொலிக்க ஒரு டென்னிஸ் நட்சத்திரத்தை ஏன் நாம் உருவாக்கவேயில்லை...

Read More
ஆன்மிகம்

ஒரு வேளை உணவு, உயிருள்ளவரை முருகன்

ராமேஸ்வரத்துக்குப் போகிறவர்கள் ராமனையும் சிவனையும் கும்பிட்டுவிட்டு, இருந்தால் சில நீத்தார் கடன்களை பைசல் செய்துவிட்டு,  தனுஷ்கோடி முனையில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டு திரும்பிவிடுவதே உலக வழக்கம். இன்னும் இருக்கிறது அங்கே. பார்க்கவும் படிக்கவும் உணரவும் அனுபவிக்கவும். கொஞ்சம் மெனக்கெட வேண்டும்...

Read More
இந்தியா

போதையின் பிடியில் காஷ்மீர்

காஷ்மீரத்தின் தலைநகரான ஶ்ரீநகரில் அரசு நடத்தும் போதைப்பொருள் மறுவாழ்வு மையம் ஒன்ற செயல்படுகிறது. அங்கே நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வரிசையில் நிற்கிறார்கள். காஷ்மீர் மொத்தத்திற்கும் இரண்டு மறுவாழ்வு மையங்கள் தான் உள்ளன. அதில் பிரபலமான ஒன்று IMHANS. இங்கு மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின்...

Read More
பயணம்

கோடியில் ஒரு நாள்

ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு பத்தொன்பது கிலோ மீட்டர். இரு மருங்கிலும் சவுக்கு மரம் மறைத்திருந்தது. ஆனாலும் கொஞ்சம் தூரத்திலேயே நாம் கடலுக்குள் செல்கிறோம் என்ற உணர்வு ஏறபட்டுவிட்டது. அந்த மயான அமைதியை எங்கிருந்தோ கிழிக்கும் காற்றின் சத்தத்தால். ஜடாயு தீர்த்தத்தைத் தாண்டியதும் நீங்கள்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!