Home » கோடியில் ஒரு நாள்
பயணம்

கோடியில் ஒரு நாள்

ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு பத்தொன்பது கிலோ மீட்டர். இரு மருங்கிலும் சவுக்கு மரம் மறைத்திருந்தது. ஆனாலும் கொஞ்சம் தூரத்திலேயே நாம் கடலுக்குள் செல்கிறோம் என்ற உணர்வு ஏறபட்டுவிட்டது. அந்த மயான அமைதியை எங்கிருந்தோ கிழிக்கும் காற்றின் சத்தத்தால். ஜடாயு தீர்த்தத்தைத் தாண்டியதும் நீங்கள் கடலுக்குள் செல்கிறீர்கள் என்பதைப் பளிங்கு போல் காட்டிவிடுகிறது.

முதன் முறையாகச் செல்பவர்களுக்கு தனுஷ்கோடி யாத்திரை நரம்புகளில் ஒரு பரவச போதையைச் செலுத்தி வேகமாக ரத்தத்தில் பரவ வைத்துவிடும்.

போதை உச்சத்திற்கேறும்போது ”நாம இப்போ எங்கப் போறோம்? கடலுக்குள்ள போறோம்” என்று டோரா புஜ்ஜி கணக்காக வாய்விட்டு குஷியாகப் பாட வைக்கும் வயதானவர்களையும். கடலா அது! அதன் நிறமும் காட்சியும் என்ன ஒரு ஏகாந்தம். ஆளற்ற அமைதியும் கடற்காட்சியும் பசை போட்டு ஒட்டிக்கொள்ளும். வீடு திரும்பி ஒரு வாரமானாலும் அந்தக் குளுகுளுப்பும் நினைவும் நம்மை விட்டு நீங்காது.

சற்று தூரத்தில் இடதுபுறம் கடலுக்குள் சாலை அமைத்திருக்கிறார்கள். அதில் சென்றால் கோதண்டராமர் கோயில் இருக்கிறது. இங்குதான் விபீஷணருக்கு ராமர் பட்டாபிஷேகம் செய்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது. இலங்கை மன்னருக்குத் தமிழகக் கடல் பரப்பில் பட்டாபிஷேகமா? இது இலங்கைதானா என்ற சந்தேகம் நம்மையறியாமல் முளைவிட்டுவிடுகிறது. ஆராய்ச்சியை விட்டு பயணத்தை அனுபவிக்க வேண்டும். இங்கே அறிவியலுக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள் பல இருக்கின்றன என்று புத்தி எச்சரித்தது. மீண்டும் வந்த வழியே வந்து இடது திரும்பினால் பரந்த கடல்பரப்பின் நடுவில் போடப்பட்ட சாலையில் செல்வோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!